பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தொல்காப்பியம்-நன்னூல்


     உடல்மேல் உயிர்வந் தொன்றுவ தியல்பே. (நன். 204)

என்ற சூத்திரத்தால் விளங்கக் கூறியுள்ளார்,

     “மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்” (நூன் 5) 

என்புழித் தனிமெய் பதினெட்டும் புள்ளிபெற்று நிற்குமெனக் கூறி, உயிரேறுங்கால் அவை புள்ளியிழந்து நிற்குமென உய்த்துணர வைத்தார். ஈண்டு மெய்முதல் மெய்யீறு என வகுத்துரைக்குங்கால், மொழி முதல் மெய்களும் புள்ளிபெறுமோ என்னும் ஐயமகற்றுதல் வேண்டி இச்சூத்திரத்தால் மொழிக்கு ஈறாய மெய்களே புள்ளிபெறுவன எனக்கூறி, மொழிக்கு முதலாயின மெய்கள் புள்ளிபெறா என்பதனை உய்த்துணர வைத்தா ராதலின் இச்சூத்திரம் கூறியது கூறலன்மையுணர்க.

     குற்றிய லுகரமும் அற்றென மொழிப. (தொல். 195) 

இது, மேல் மொழியீற்றின் மெய்க்குக் கூறிய விதியினை மொழியீற்றில் வரும் குற்றியலுகரத்திற்கும் மாட்டெறிந்து கூறுகின்றது.

   (இ-ள்) குற்றியலுகரவீறும் மெய்யீற்றின் தன்மையை யுடையதாமென்பர் எறு.
   மெய்யீற்றின் தன்மையாவன புள்ளிபெறுதலும் புள்ளி யிழந்து உயிரேற இடங்கொடுத்தலுமாம். அவ்விரண்டினுள் புள்ளி பெறுதலை விலக்கி, உயிரேற இடங்கொடுத்தலாகிய ஒன்றைமட்டும் குற்றியலுகரத்திற்கு இயைத்துக் கூறுதலின், இம் மாட்டேறு ஒருபுடைச் சேறலென வுணர்க என்றார் இளம் பூரணர்,
     ‘ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம் செய் 8) 

எனவரும் செய்யுளியற் குத்திர வுரையுள் “எழுத்தோத்தினுள் மெய்யிறெல் லாம் புள்ளியொடு நிலையல் எனக்கூறிக் குற்றியலுகரமும் அற்றென மொழிப’ எனக் குற்றுகரத்திற்குப் புள்ளி பெறுதலுங் கூறினான்’ எனப் பேராசிரியர் கூறுதலால், குற்றியலுகரத்திற்குப் புள்ளியிட்டெழுதும் வழக்கம் பேராசிரியர் காலத்தில் நிலவிய தெனத் தெரிகிறது. ஆனால் அவர்க்குக் காலத்தால் முற்பட்ட இளம்பூரணர் காலத்தில் இவ்வழக்கம் நிலைபெற்றிருப்பதாகத் தெரியவில்லை. குற்றியலுகரத்திற்குப் புள்ளியிட்டெழுதும் வழக்கம் இளம்பூரணர் காலத்தில் நிலவியிருப்பின் குற்றிய லுகரமும் அற்று என்னும் இம்மாட்டேற்றினை முழுவதுஞ் சேறலாகவே கொண்டு பொருள் கூறியிருப்பர். அவர் அங்ஙனம்