106
தொல்காப்பியம்-நன்னூல்
னாரின் கருத்தாயின் ஆறு என்பதன்முன் உழக்கு என்னும் உயிர் முதல்மொழி வருமிடத்து குற்றியலுகரம் கெடும் எனக் கூறியிருப்பர். அங்கனம் கூறாது ஆறென்கிளவி முதல் நீடும்மே” (குற்றியலுகரம்-52) என்ற அளவே கூறிப்போதலின் ஆறு என்பதன் ஈற்றுக்குற்றியலுகரம் உயிர் முதன்மொழி வரு மிடத்துக் கெடாதென்பதே தொல்காப்பியனார் கருத்தென்பது நன்கு தெளியப்படும். ஆகவே மேலெடுத்துக் காட்டிய நூறென் கிளவி” (குற்-67), ஆறன் மருங்கின் குற்-64) என்னும் இவ்விரு சூத்திரங்களுக்கும் சிவஞான முனிவர் கூறிய பொருள்கள் தொல்காப்பியனார் கருத்துக்கு முரணாவன என்பதும், இங்ஙனம் நூலாசிரியர் கருத்துக்கு முரண்படக் கூறிய இப் பொருள்களை அடிப்படையாகக் காட்டி ஏனைக் குற்றியலுகர வீறும் உயிர் முதன்மொழி வந்து புணர்வழிக் குற்றியலுகரங் கெட்டு நின்ற ஒற்றின் மேல் உயிர் வந்து ஒன்றி முடியு மென்பது உம் பெறப்படும்’ என ஒன்றின முடித்தல் என்பதனாற் கொள்ளுதற்கு இடமில்லையென்பதும் நன்கு தெளிவாதல் காண்க. -
அஃது, இஃது, உஃது எனவரும் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரத்தின் முன் உயிர்முதன்மொழி வருங்கால் ஆய்தங் கெடாது நிலைபெறுமெனவும் மெய்முதன்மொழி வருங்கால் ஆய்தங் கெடுமெனவும் கூறிய தொல்காப்பியனார், அச்சொற் களின் இறுதிக்கண் நின்ற குற்றியலுகரம் கெடுமெனக் கூறாமை யானும், குற்றியலுகரவீற்றுச் சொற்களுக்கு அம், அக்கு, அன், இன், ஏ முதலிய சாரியைப் பேறு கூறிய ஆசிரியர், உயிர் முதலாகிய அச்சாரியைகள் வந்து புணருங்கால் நிலைமொழி யிற்றுக் குற்றுகரங் கெடுமென யாண்டுங் கூறாமையானும், குற்று கரவீற்று எண்ணுப் பெயர்களுள் ஒன்றாகிய ஒன்பது என்னுஞ் சொல் நிலைமொழியாய் நிற்க அதன் முன் அளவுப் பெயரும் நிறைப் பெயரும் ஆயிரம் என்னும் எண்ணுப்பெயரும் வந்து புணருங்கால் அது தன் வடிவுநிலை திரியாது இன்சாரியை பெறும் எனக் குற்றியலுகரப் புணரியலின் 54, 65ம் சூத்திரங்களில் ஆசிரியர் கூறுதலாலும் குற்றியலுகர வீறு உயிர்முதன் மொழி வருமிடத்துக் கெடாது நின்று மெய்யிறுபோல உயிரேற இடங்கொடுக்கு மென்பதே ஆசிரியர் தொல்காப்பியர் கருத்தென்பது இனிது புலனாகும்.
இனி, “நாகரிது என்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர் உயிரோசையும் பெற்று அவ்விரண்டுங் கூடிநின்றல்லது