உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புணரியல் 107

அப்பொருளுணர்த்தலாகாமையின் குற்றியலுகரத் திறுதி முன்னும் உயிர் முதன்மொழி வந்தால் புள்ளியிறுபோல அவ்வுயிரேறி முடியுமென்பார்க்குக் கதவழகிது கனவழகிது என் புழியும் முன்னர் முற்றுகரவோசையும் பின்னர் உயிரோசையும் கூடியல்லது அப்பொருளுணர்த்தலாகாமையின் முற்றுகரத்தின் மேல் உயிரேறி முடிந்ததெனக் கூறல்வேண்டும். அவ்வாறன்றி முற்றுகரங்கெட நின்ற ஒன்றின்மேல் உயிரேறி முடியுமென்பதே எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாகலானும், குற்றியலுகரத்திற்கும் உயிரென்னுங் குறியீடு கொண்டமையின் ஒற்றின்மேலன்றி உயிரின்மேல் உயிரேறுதல் பொருந்தாமையானும், நாகரிதென் புழி இதழ் சிறிது குவிதலாகிய முயற்சி ஆண்டுப் பெறப்படா மையிற் குற்றியலுகரவோசை ஆண்டுண்டென்றல் பொருந்தா மையானும், ஆறன்மருங்கின் என்றற்றொடக்கத்துச் சூத்திரங் களோடு முரணுதலானும், யகரம் வரும் வழி யிகரங்குறுகி யுகரத்தின்மேல் உயிரேறி முடியு மென்னாது இகரங்குறுகும் - உகரக்கிளவி துவரத்தோன்றாது என்றாராகலானும் அவர் கூற்றுப்பொருந்தாது என்பர் சிவஞான முனிவர்.

   கதவழகிது, கனவழகிது என்புழிக் கதவு கனவு எனவரும் முற்றுகரங்களை நுந்தை யென்னுஞ் சொல்லிற் போலக் குற்றுகர மாக ஒலித்தமையால் அவை குற்றியலுகரத்திற்குரிய செய்கை பெற்றுத் திரிந்தனவன்றி இயல்புபுணர்ச்சி பெற்றன. வல்லவாத லானும், திரிபுடைய இவற்றைக்காட்டிக் குற்றிய லுகரவீறுகள் எல்லாவற்றிற்குமுரிய உயிரேறி முடிதலாகிய சிறப்பியல்பினை விலக்குதல் பொருந்தாமையானும், கதவழகிது என் புழி வகரத்தின்கண் முற்றுகரவோசையின்மையும் நாகரிது என்புழிச் சகரத்தின்கண் குற்றுகரவோசை நுண்ணிய நிலையிலுண்மையும் இவ்விரு தொடர்களையும் ஒலித்துக் காண்போர்க்குச் செவி கருவியாகப் புலனாகலானும், குற்றியலுகரத்திற்கு உயிரென்னுங் குறியீடுண்டெனினும் அக் குறியீடொன்றேபற்றி எல்லா வகை யானும் குற்றியலுகரம் உயிரியல்பே பெறுமெனக் கோடல் பொருந்தாமைக்கு அது மெய்யின் தன்மை பெறுமென விதித்த ‘குற்றியலுகரமும் அற்றென மொழிப’ என்னும் இச்சூத்திரமே சான்றாகலாலும், குற்றியலுகரத்திற்கு இதழ்குவிதலாகிய முயற்சி புலப்பட்டே வருமென ஆசிரியர் கூறாமையானும், மெய்யிறுபோல உயிரேற இடங்கொடுத்தலாகிய புணர்ச்சி வேறுபாடு முதலாயின கருதியே குற்றுகரவீற்று விதிகளை உயிர்