106
தொல்காப்பியம்-நன்னூல்
மயங்கிலிற் கூறாது குற்றியலுகரப்புணரியல் எனத் தனியியல் வகுத்துக் கூறினார் ஆசிரியராதலானும், குற்றுகரவீறும் முற்றுகர வீறும் புணர்ச்சிவகையான் ஒத்தனவென்பது தொல்காப்பியர் கருத்தாயின் அவற்றை இருவேறியல்களிற் பிரித்துரைக்க வேண்டிய இன்றியமையாமையின், ஆறன்மருங்கின்’ என்றற் றொடக்கத்துச் சூத்திரங்களோடு முரணாமை மேற்காட்டினா மாதலானும், யகரம் வரும்வழி இகரங் குறுகும் உகரக்கிளவி துவரத் தோன்றாது எனவருஞ் சூத்திரம் குற்றியலுகர வீற்றின் முன் யகரமுதன்மொழிவரின் அவ் யகரத்தோடு குற்றியலுகரத் திற்கு மயக்கவிதியின்மையால் குற்றியலுகரங்கெட அது நின்ற நிலைக்களத்து இகரந்தொன்றிக் குறுகிநிற்குமெனக் கூறியதல்லது குற்றியலுகரத்தின் முன் இகரம் வரக் குற்றியலுகரம் கெடுமெனக் கூறியதன்றாகலானும் சிவஞான முனிவர் கூறுமாறு குற்றிய லுகரம் உயிர்முதன்மொழி வரிற் கெடுமென்றல் தொல்காப்பிய னார் கருத்தன்றென்க.
இனி குற்றியலுகரமுமற்று’ எனவரும் புணரியல் மூன்றாஞ் சூத்திரத்தினைப் புள்ளியீற்றுமுன் உயிர் தனித்தியலாது என வரும் இவ்வியல் முப்பத்தாறாஞ் சூத்திரத்தோடு மாட்டெறிந்து உரையாசிரியரை யுள்ளிட்டோர் பொருள் கூறினரெனவும்: அவற்றுள் மெய்யிறெல்லாம் புள்ளியொடு நிலையல் என்னுஞ் சூத்திரத்தால் அவ்வீற்றின்மெய் உயிர்முதன் மொழி வந்தால் அஃதேற இடங்கொடுத்து நிற்குமென்பதுங் கூறினாராயிற்றேல் ‘புள்ளியீற்றுமுன்’ எனச் சூத்திரஞ் செய்தது கூறியது கூற லென்னுங் குற்றந் தங்குதற்கோ வெனக் கூறி மறுக்கவெனவும் சங்கர நமச்சிவாயரும் சிவஞான முனிவரும் உரையாசிரிய ருரையிற் குற்றங் கூறினர். அவர்கள் கூறியபடி இம்மூன்றாஞ் ‘சூத்திரத்தைப் பின்வரும் முப்பத்தாறாஞ் சூத்திரத்துடன் உரை யாசிரியர் மாட்டெறிந்து பொருள்கொள்ளவில்லையென்பதும், இதன் முன்னுள்ள இரண்டாஞ் சூத்திரத்துடன்தான் மாட் டெறிந்து பொருள் கூறியுள்ளாரென்பதும், இச்சூத்திரத்திற்கு உரையாசிரியர் எழுதியவுரையினைக் கூர்ந்து நோக்குவார்க்கு இனிது புலனாகும். அன்றியும் அவற்றுள், மெய்யிறெல்லாம் புள்ளியொடு நிலையல் என்னும் இச்சூத்திரத்தாற் கூறப்பட்ட பொருளும் புள்ளியீற்று முன் உயிர் தனித்தியலாது மெய்யொடுஞ் சிவனும் அவ்வியல் கெடுத்தே’ எனவருஞ் சூத்திரத்தாற் கூறப்பட்ட பொருளும் ஒன்றாயினன்றே கூறியது