பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புணரியல் 109

கூறலென்னுங் குற்றந் தங்குவது? மொழிக்கிறாய மெய்யெல்லாம் புள்ளியொடு நிற்கும் எனக்கூறி, அவை உயிர் முதன்மொழி வந்தவிடத்து உயிரேற இடங்கொடுக்குமென்பதனை யுய்த்துணர வைப்பது மெய்யிறெல்லாம் புள்ளியொடு நிலையல் என்னுஞ் சூத்திரமாகும். இது நிலைமொழிபற்றிய விதி. இனி மெய்யீற்றின் முன் உயிர் தனித்து நடவாது; தான் தனி நின்ற இயல்பை விடுத்து நிலைமொழியீற்று மெய்யொடுங் கூடும் என்பதனைக் கூறுவது “புள்ளியீற்றுமுன்” எனவரும் இவ்வியல் 36ம் சூத்திர மாகும். இது வருமொழிபற்றிய விதி. இங்ஙனம் நிலை மொழிக் கருவியும் வருமொழிக் கருவியுமாக இவ்விரு சூத்திரப் பொருளையும் பகுத்துணருங்கால் கூறியது கூறலென்னுங் குற்றந் தங்குதல் யாண்டையதென மறுக்க,

   இதுகாறுங் கூறியவாற்றால் குற்றியலுகரம் உயிர் முதன் மொழி வரிற் கெடுமென வீரசோழிய நூலாசிரியரும் நன்னூ லாரும் சங்கரநமச்சிவாயர் சிவஞான முனிவர் முதலிய பிற்கால உரையாசிரியர்களும் கூறும் கொள்கை பொருந்தாதென்பதும், குற்றியலுகரம் மெய்யிறுபோலக் கெடாது நின்று உயிரேற இடங் கொடுக்குமென உரையாசிரியரையுள்ளிட்டோர் கூறும் கொள்கையே தொல்காப்பியனார் கருத்தென்பதும் குற்றுகரத் திற்கு முன்னர்வந்த உயிரேறிமுடிய அரை மாத்திரையாய் நிற்றலும் முற்றுகரத்திற்கு முன்னர்வந்த உயிரேறி முடியாமையுந் தம்முள் வேற்றுமை’ என நச்சினார்க்கினியர் காட்டிய இலக்கணமே குற்றியலுகர வீறுகளெல்லாவற்றின் கண்ணுஞ் செல்லுமென்பதும் நன்கு வலியுறுத்தப் பட்டமை காண்க.
     உயிர்மெய் யீறும் உயிரீற் றியற்றே. (தொல். 106)
   இது, மேல் மெய்யேயுயிரென்றாயிரியல’ என்ற வழி நிகழ்வதோர் ஐயம் அகற்றுகின்றது.
   (இ-ள்) உயிர்மெய்யீற்று மொழியும், மெய்முன்னும் உயிர் பின்னுமாக ஒலித்து நின்றவாற்றால் உயிரீற்றின் தன்மையை யுடைத்து எறு.
   ஈறும் என்ற உம்மையால் இடையில் நின்ற உயிர் மெய்யும் உயிரின் இயல்பை உடைத்தென்றும் “ஈறும் இடையும் உயிருள் அடங்குமெனவே முதல் மெய்யுள் அடங்கு மென்பதாயிற்று” என்றும் கூறுவர் இளம்பூரணர்.