உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தொல்காப்பியம்-நன்னூல்


மொழிகள் தம்மிற் புனருந் தன்மை, திரிபு மூன்றும் இயல்பு ஒன்றும் என அந்நான்கேயாம் எ_று.

   இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயர் வினைகளைச் சார்ந்தல்லது தாமாக நில்லாமையின் பெயர் வினைகட்கே புணர்ச்சி விதி கூறினார்.
     அவைதாம்,
     மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்
     றிவ்வென மொழிய திரியு மாறே.         (தொல். 109
   இது மேலைச் சூத்திரத்திற் கூறப்பட்ட மூன்று திரிபாவன இவையெனக் கூறுகின்றது.
   (இ-ள்) முன்னர்த் திரிபு எனச் சொல்லப்பட்ட அவை தாம் திரியும் நெறியினை ஒரெழுத்து மற்றொன்றாய் வடிவு வேறுபடுதலும், அங்கு இல்லாத எழுத்து புதிதாய்த் தோன்றுதலும், உள்ள எழுத்து கெடுதலும் ஆகிய மூன்று கூறுபாடுடைய எனச் சொல்லுவர் எறு.
   திரியும் நெறி மூன்றெனவே இம்மூன்று மல்லாதது இயல்பு புனர்ச்சி யெனக் கொள்க.
     (உ-ம்)  பொன் + குடம் = பொற்குடம் (மெய்யிறிதாதல்)
              யானை + கோடு = யானைக்கோடு (மிகுதல்) 
              மரம் + வேர் = மரவேர் (குன்றல்) 
              குவளை + மலர் = குவளைமலர் இயல்பு) 
   மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாகவுடைய பகாப்பதம் பகுதபதம் என்னும் இரண்டு பதங்களும் தன்னொடு தானும் பிறிதொடு பிறிதுமாய் அவ்வழிப் பொருளினாலாவது வேற்றுமைப் பொருளினாலாவது பொருந்துமிடத்து நிலை மொழியும் வருமொழியும் இயல்போடும் விகாரத்தோடும் பொருந்துவது புணர்ச்சியாம் என்றும், தோன்றல், திரிதல், கெடுதல் என மொழியிடத்துத் தோன்றும் விகாரம் மூன்றென் றும், அம்மூன்றும் இல்லாதது இயல்பென்றும் பவணந்தி முனிவர் கூறியுள்ளார்.
     மெய்யுயிர் முதலி றாமிரு பதங்களும் 
     தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப் 
     பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள் 
     இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே.  (நன். 151)
     விகார மனைத்தும் மேவல தியல்பே.     (நன். :153)