உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புணரியல் 119



   (உ-ம்) தமது, நமது, நுமது, தனது, எனது, நினது எனவரும். 
   “நினவ கூறுவல் எனவ கேண்மதி’ என்றாற்போல ஆறாவதற்குரிய அகரவுருபின் முன்னரும் நின, என என்றாங்கு ஒர் அகரவெழுத்துப்பேறு நிலைமொழிக்கண் வருதலுளதாக ஆசிரியர் கருதினாராதலின், ஆறனுருபும் நான்கனுருபும், நெடு முதல் குறுகு மொழிகளோடு புணருமிடத்து அவ்விரண்டற்கும் பொதுவாக நிலை மொழிக்கண் அகரப்பேறு விதித்தார். அங்குப் பெற்று நின்ற அகரத்தின்முன்னர் அதுவென்னும் ஆறனுருபின் அகரம் கெடுகவென இங்கு விதித்தார். அவ்வாறு நெடுமுதல் குறுகு மொழிகள் ஈற்றில் அகரம் பெறுமென விதியாது அது வென்னும் உருபின் அகரம் ஏறி முடியுமென நன்னூலார் கொண்டனர். நினவ எனவ என்றற் றொடக்கத்துச் சொற்களில் ஆறாவதன் அகரவுருபின் மேலும் நிலைமொழியீற்றில் வேறோர் அகரம் காணப்படுதலால் தொல்காப்பியனார் கொண்ட முறையே பொருத்தமுடைய தென்பது பெறப்படும்.

வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே. (தொல், 16)

   இது, வேற்றுமையுருபு பெயர்க்கண் நிற்குமாறு கூறுகின்றது. 
   இ-ள்) வேற்றுமையுருபு பெயரோடு புணரும் நிலைமைக் கண் பெயர்களின் பின்னிடத்தன எறு.
   (உ-ம்) சாத்தன் + ஐ = சாத்தனை, சாத்தன் ஒடு = சாத்தனொடு எனவரும்.
   மேல் ‘உருபுநிலை திரியாது ஈறு பெயர்க்காகும்.” என்கின்றாரன்றோ வெனின், பெயரொடு பெயர் முதலிய நால்வகைப் புணர்ச்சியையும் வேற்றுமை, அல்வழியென இரண்டாக அடக்கலின், வினைவழியும் உருபு வருமென்பதுகூட நின்றதாகலின், வினைவழி வேற்றுமை யுருபு வாராதென விலக்குதற்பொருட்டு ஈண்டு இது கூறப்பட்ட தென்பர் உரையாசிரியர். -
     உயர்தினைப் பெயரே யஃறிணைப் பெயரென் 
     றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே. (தொல், 17) 
   இது வேற்றுமை யுருபொடு புணரும் பெயர்கட்குப் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது.
   (இ-ள்) பொருளை யொருவர் கருதுதற்குக் காரணமான நிலைமையையுடைய பெயர்கள், உயர்தினைப் பெயரும் அஃறிணைப் பெயரும் என இருவகைப்படுமென்பர் ஆசிரியர்.