உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புணரியல் 121

     அவற்றுள் 
     இன்னி னிகர மாவி னிறுதி 
     முன்னர்க் கெடுத லுரித்து மாகும்.       (தொல். 120) 
   இஃது, இன்சாரியை முதல் திரியுமாறு கூறுகின்றது.

(இ-ள்) இன்சாரியையது இகரம் ஆ என்னும் ஒரெழுத் தொருமொழி முன்னர்க் கெட்டு முடியவும் பெறும் எ-று.

   உரித்துமாகுமெனவே கெடாது நிற்கவும் பெறும் என்றபடி, இஃது ஒப்பக்கூறலென்னும் உத்தி.
   இன்னின் இகரம் மாவின் இறுதி எனப் பிரித்துக் கூறுதற்கும் இச்சூத்திரம் இடந்தருதலின் மா என்னும் ஒரெழுத் தொருமொழி முன்னும் இன்சாரியையின் இகரம் கெடுதல் கொள்க.
   (உ-ம்) ஆனை, ஆவினை, மானை, மாவினை எனவரும்.
     அளவாகு மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை 
     னஃகான் றஃகா னாகிய நிலைத்தே. (தொல். 2) 
   இன்சாரியை ஈறு திரியுமாறு கூறுகின்றது. 

(இ-ள்) அளவுப் பெயராய்ப் பின்னிற்கும் மொழிக்கு முன்னர் நின்ற எண்ணுப் பெயர்களின் ஈற்றிலுள்ள குற்றுகரத்தின் மேல்வந்த இன்சாரியையது னகரம் றகரமாய்த் திரியும் நிலைமையுடைத்து எ-று.

   (உ-ம்) பத்து + இன் + அகல் = பதிற்றகல்,
           பத்து + இன் + உழக்கு = பதிற்றுழக்கு, எனவரும். 
   
   இவற்றைப் பத்து என நிறுத்தி நிறையுமளவும் குற்-3) என்னுஞ் சூத்திரத்தால் இன்சாரியை கொடுத்துக் குற்றியலுகர மெய்யொடுங் கெடுமே (குற்-38) என்றதனால் குற்றுகரத்தை மெய்யோடுங் கெடுத்து வேண்டுஞ் செய்கைசெய்து முற்றவின் வரும் (குற்-8) என்பதனால் ஒற்றிரட்டித்து முடிப்பர் நச்சினார்க்கினியர்.
   'நிலைத்து' என்றதனால் பிறவழியும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்வர் உரையாசிரியர்.
   (உ-ம்) பத்து + இன் ஒன்று = பதிற்றொன்று,
           பத்து + இன் + ஏழு = பதிற்றேழு எனவரும். 
   இங்ஙனம் இன்சாரியை ஈறுதிரிந்ததனை இற்றுச் சாரியையாகக் கொண்டார் நன்னூலார். (கு 244)

தொ.9