இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புணரியல் 123
இஃது இக்குச் சாரியை முதல்திரியுமாறு கூறுகின்றது
இ-ள்) அத்துச் சாரியையின் அகரம் அகரவீற்றுச்சொல் முன்னர் நில்லாதுகெடும் எறு.
(உ-ம் மக + அத்து + கை = மகத்துக்கை எனவரும், (மக-குழந்தை)
இக்கி னிகரம் இகரமுனை யற்றே. (தொல். 126)
இஃது இக்குச் சாரியை முதல்திரியுமாறு கூறுகின்றது.
(இ-ள்) இகரவீற்றுச் சொல்முன்னர் வரும் இக்குச்சாரியை யின் இகரம் முற்கூறிய அத்துச்சாரியையின் அகரம் போலக் கெடுதலாகிய அவ்வியல்பில் நிற்கும் எறு.
(உ-ம்) ஆடி+ இக்கு கொண்டான் = ஆடிக்குக் கொண்டான் என வரும்.
ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும். (தொல்.127)
இதுவும் அது.
(இ-ள்) மேற்கூறிய இக்குச் சாரியையின் இகரம் ஐகாரவிற்றுச் சொல்முன்னரும் மேற்கூறியபடி கெடுதலாகிய நிலையையடையும் எ-று.
(உ-ம்) சித்திரை இக்கு கொண்டான் = சித்திரைக்குக் கொண்டான் எனவரும். இவ்வாறு இக்குச் சாரியையின் இகரம் கெடுதல் கருதி அதனைக் குகரச் சாரியையாகக் கொண்டார் நன்னூலார்.
எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி அக்கி னிறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே குற்றிய லுகர முற்றத் தோன்றாது. (தொல். 128)
இஃது அக்குச்சாரியை ஈறு திரியுமாறு கூறுகின்றது.
(இ-ள்) எவ்வகைப்பட்ட பெயர்முன்னும் வல்லெழுத்து வருமிடத்து இடைநின்ற அக்குச்சாரியையின் இறுதிக் குற்றியலுகரம் முடியத் தோன்றாது; அக் குற்றுகரத்தாற் பற்றப்பட்ட வல்லெழுத்தாகிய மெய் தனக்கு மேல் நின்ற மெய்யோடும் சேரக்கெடும் எ-று.
(உ-ம்) குன்று + அக்கு + கூகை = குன்றக்கூகை. மன்று + அக்கு + பெண்ணை = மன்றப் பெண்ணை என வரும். இங்ஙனம் அக்குச்சாரியையின் அகரமட்டும் நிற்கப், பின்னின்ற