உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புணரியல் 127

   (இ-ள்) வரலாற்று முறைமையையுடைய மூன்று சாரியை களையும் குற்றெழுத்துடையவாம் எறு.
   (உ-ம் அகாரம் அகரம், அஃகான் எனவரும். வரன்முறை என்றதனால் அஃகான் என ஆய்தம் மிக்கு முடிதலும் கொள்க என்பர் உரையாசிரியர்.
     ஐகார ஒளகாரங் கானொடுந் தோன்றும். (தொல். 137) 
   இஃது அவற்றுட் கரமுங் கானும் என்பதற்கு ஓர் புறனடை கூறுகிறது.
   (இ-ள்) நெட்டெழுத்துக்களில் ஐகாரமும் ஒளகாரமும் முன் விலக்கப்பட்ட கான் சாரியையொடும் வரும் எறு.
  (உ-ம்) ஐகான் ஒளகான் எனவரும்.
   மேற்கூறிய நான்கு சூத்திரங்களாலும் எடுத்துரைக்கப் பட்ட எழுத்தின் சாரியைகளை,
     மெய்க எகரமும் நெட்டுயிர் காரமும் 
     ஐ ஒள, க் கானும் இருமைக் குறிலிவ் 
     விரண்டொடு கரமுமாஞ் சாரியை பெறும்பிற. (நன்.126) 

என்ற ஒரு சூத்திரத்தால் தொகுத்துக் கூறினார் நன்னூலார்.

     மெய்கள் அகரச்சாரியை பெறுமென்பது “மெய்யினியக்கம் அகரமொடு சிவனும்” என்ற சூத்திரப்பொருளைத் தழுவிய தாகும். உயிர்மெய் நெடில் சாரியைபெறா தென் பார் நெடிலெனப் பொதுப்படக்கூறாது நெட்டுயிர் காரச் சாரியை பெறுமென்றார்.
     புள்ளி யிற்றின்முன் உயிர்தனித் தியலாது 
     மெய்யொடுஞ் சிவனும் அவ்வியல் கெடுத்தே. (தொல்.138) 
   இஃது உயிர்முதன்மொழி புள்ளியீற்றின் முன் வருங்காற் பிறப்பதோர் வருமொழிக் கருவி கூறுகின்றது.
   (இ-ள்) புள்ளியீற்றுச் சொல்முன் வரும் வருமொழி முதலில் நின்ற உயிர், தனித்து நடவாது, தான் தனித்து நின்ற அவ்வியல் பினைக் கெடுத்து நிலைமொழி யீற்றிலுள்ள அம்மெய்யோடு கூடும் 

எ-று.

   (உ-ம்) பால் + அரிது  = பாலரிது, பால் + ஆழி = பாலாழி

என வரும்.

   ஒன்றின முடித்தலால் இயல்பல்லாத புள்ளிமுன் உயிர் வந்தாலும் இவ்விதி கொள்க என்பர் உரையாசிரியர்.