இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புணரியல் #23
இ ஈ ஐவழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும். (நன். 182)
எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார்.
வரையார், என்றதனால் உடம்படுமெய் கோடல் ஒருதலை அன்றென்பது கொள்ளப்படும்.
கிளி அரிது, மூங்கா இல்லை என உதாரணங்காட்டுவர் இளம்பூரணர்.
எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி இசையிற் றிரிதல் நிலைஇய பண்பே. (தொல். 14, இது எழுத்துக்கள் ஒன்று பலவாதல் கூறுகின்றது. (இ-ள்) எழுத்தால் ஒன்றுபோலத் தோன்றிச் சொல்லால் வேறுபட்டுப் பொருள் விளங்கி நிற்கும் புனர் மொழிகள் எடுத்தல், படுத்தல், நலிதல் என்கின்ற ஓசை வேற்றுமையாற் பிரிந்து புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற பண்பாம் எறு.
(உ-ம்) செம்பொன்பதின்றொடி, செம்பருத்தி, நாகன் றேவன்போத்து, தாமரைக்கனியார், குன்றேறாமா என இவை இசையிற்றிரிந்தன.
இதனைச் சொல்லதிகாரத்தில்,
எழுத்தியல் திரியாப் பொருள்திரி புணர்மொழி இசைத்திரி பாற்றெளி வெய்து மென்ப. (நன். 391)
என்ற பொதுவியற் சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார்.
அவைதாம் முன்னப் பொருள புணர்ச்சி வாயின் இன்ன வென்னு மெழுத்துக்கட னிலவே. (தொல். :42,
இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது.
(இ-ள்) பல பொருட்குப் பொதுவென்ற அப்புணர் மொழிகள்தாம், குறிப்பாலுணரும் பொருண்மையினை யுடையன; புணர்ச்சியிடத்து இத்தன்மையவெனும் எழுத்து முறைமையுடையன அல்ல எறு.
எனவே “செம்பொன்பதின்றொடி” என்ற தொடர், பொன்னாராய்ச்சி யுள்ளவழி செம்பொன்+பதின்றொடி எனப் பிரிந்து நின்றும், செம்பாராய்ச்சி உள்வழி செம்பு ஒன்பதின் றொடி எனப் பிரிந்து நின்றும் குறிப்பாற் பொருளுணர்த்து