இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
134
தொல்காப்பியம்-நன்னூல்
(இ-ன்) அல்வழிக்கண் திரியாது நின்ற அவ்விரண்டொற் தும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் வல்லெழுத் தல்லாத விடத்து மேற்கூறிய இயல்பு முடியைப் பெறும் என்பதாம்.
எனவே இவ்விரண்டும் வேற்றுமைக்கண் வல்லெழுத்து வருவழித் திரியுமென்பதாம், திரிபு பின்னர் (302, 332-ம் சூத்திரங்களில் கூறப்படும்.
(உ-ம் மண், பொன் என நின்று, ஞாற்சி, நீட்சி என வன்கணம் ஒழிந்த எல்லாவற்றோடும் இயல்பாயின.
இவ்விரு சூத்திர விதியையும் அறிந்த நன்னூலார்,
ணனவல் லினம்வரட் உறவும் பிறவரின் இயல்பு மாகும் வேற்றுமைக்கு, அல்வழிக்கு அனைத்துமெய் வரினும் இயல்பா கும்மே (நன்.209)
என ஒரு சூத்திரமாக்கிக் கூறினார்.
லனவென வருஉம் புள்ளி முன்னர்த் தநவென வரிற் றனவா கும்மே. (தொல்.149)
இது புள்ளி மயங்கியலை நோக்கியதோர் கருவி கூறுகின்றது.
(இ-ள்) லகார ணகாரம் என்று சொல்ல வருகின்ற புள்ளி களின் முன்னர்த் தகார நகாரமாகிய மொழி முதலாகெழுத் துக்கள் வரின், அத் தகர நகரங்கள் நிரனிறையானே றகர னகரங் களாய்த் திரியுமென்பதாம். -
(உ-ம்) கல்+தீது = கஃறீது; கல்+நன்று = கன்னன்று; பொன்-தீது = பொன்றிது; பொன்+நன்று = பொன்னன்று எனவரும்.
னனவென் புள்ளிமுன் டனவெனத் தோன்றும். (தொல். 150) இதுவுமது.
(இ-ள்) ணகார ளகாரங்களின் முன்னர் வரும் அத் தகார நகாரங்கள் நிரனிறையானே டகார ணகாரங்களாய்த் திரியும் என்பதாம்.
(உ-ம் மண்-தீது = மண்டீது, மண்+நன்று = மண்ணன்று; முள்+தீது = முஃடீது; முள்+நன்று = முண்ணன்று எனவரும்.
இவ் வருமொழித் தகர நகரத் திரிபினை,