உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொகைமரபு 135



     னலமுன் றனவும் னளமுன் டனவும் 
     ஆகுந் தநக்கள் ஆயுங் காலே. (நன்.237)

என்பதனால் குறிப்பிட்டார் நன்னூலார்.

   இவற்றின் நிலைமொழித் திரிபினைத் தத்தம் ஈற்றுட் கூறுவர் தொல்காப்பியனார்.
     உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும் 
     புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும் 
     இயல்பா குதவும் உறழா குநவமென் 
     றாயி ரியல வல்லெழுத்து வரினே. (தொல்.151)
   இது முன்னிலை வினைச்சொல் வன்கணத்துக்கண் முடியுமாறு கூறுகின்றது.
  (இ-ள் உயிரீறாய் வந்த முன்னிலை வினைச்சொற்களும் புள்ளியீறாய் வந்த முன்னிலை வினைச் சொற்களும் வல்லெழுத்து முதலாகிய மொழிவரின் இயல்பாய் முடிவனவும் உறழ்ந்து முடிவனவும் என அவ்விரண்டியல்பினை உடைய

எ-று.

   (உ-ம் எறி கொற்றா, கொனா கொற்றா, உண் கொற்றா தின் கொற்றா, சாத்தா, தேவா, பூதா இவை இயல்பு. நட கொற்றா, நடக்கொற்றா, ஈர் கொற்றா, ஈர்க்கொற்றா, சாத்தா, தேவா, பூதா, இவை உறழ்ச்சி.
   ‘ஈறு’ என்றமையின் வினைச் சொல்லே கொள்க என்பர் நச்சினார்க்கினியர்.
   நட, வா, உண், தின் என உயிரீறும் புள்ளியிறுமாய் நின்று முன்னின்றானைத் தொழிற்படுத்துவனவும், உண்டி உண்டனை, உண்டாய் என இ, ஐ, ஆய் என்னும் மூன்றீற்றவாய் நின்று முன்னின்றானது தொழில் உணர்த்துவனவும் என முன்னிலை வினைச்சொற்கள் இருவகைய. அவ்விரண்டினையும் இச் சூத்திரத்து முன்னிலைக் கிளவியென ஆசிரியர் ஒன்றாக அடக்கினார்.

இச்சூத்திர விதியினை நன்னூலார்,

     ஆவி யரழ இறுதிமுன் னிலைவினை 
     ஏவல்முன் வல்லினம் இயல்பொடு விகற்பே. (நன்.161)

என்ற சூத்திரத்துட் கூறிப்போந்தார்.