இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
136
தொல்காப்பியம்-நன்னூல்
இதன்கண், முன்னின்றானது தொழில் உணர்த்துவதாய்த் தன்மைவினை படர்க்கைவினைகட்கு இனமாய முன்னிலை வினையை முன்னிலை எனவும், முன்னின்றானைத் தொழிற் படுத்துவதாய் முன்னிலை யொன்றற்கேயுரிய வினையை ஏவல் எனவும் பவணந்தியார் விதந்து கூறினமை நோக்கத்தக்கது.
ஒளவென வரூஉம் உயிரிறு சொல்லும் ஞநமவ வென்னும் புள்ளி யிறுதியும் குற்றிய லுகரத் திறுதியு முளப்பட முற்றத் தோன்ற முன்னிலை மொழிக்கே. (தொல்,152)
இஃது எய்தியது விலக்குகின்றது. -
(இ-ள்) ஒள வென வருகின்ற உயிரீற்றுச் சொல்லும், ஞநமவ என்று சொல்லப்படும்
புள்ளிகளை இறுதியாகவுடைய சொல்லும், குற்றியலுகரத்தை யிறுதியிலே உடைய சொல்லு மாகிய இவை, முன்னிலை மொழிக்குப் பொருந்தக் கூறிய இயல்பும் உறழ்ச்சியுமாகிய முடிபிற்கு முற்றத்தோன்றா என்பதாம்.
“முற்ற என்றதனால் ஈண்டு விலக்கப்பட்டவற்றுள் குற்றிய லுகரவீறு ஒழித்து ஒழிந்தனவெல்லாம் நிலைமொழி உகரம் பெற்று வருமொழி வல்லெழுத்து உறழ்ந்து முடிதலும், குற்றியலுகரவீறு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலும் கொள்க என்பர் இளம்பூரணர்.
கெள + கொற்றா = கெளவுகொற்றா, கெளவுக்கொற்றா எனவும், உரிஞ் கொற்றா = உரிதுகொற்றா உரிதுக்கொற்றா எனவும், கூட்டு + கொற்றா = கூட்டுகொற்றா, கூட்டுக்கொற்றா எனவும் வரும்.
உயிரீ றாகிய உயர்திணைப் பெயரும் புள்ளி யிறுதி உயர்திணைப் பெயரும் எல்லா வழியும் இயல்பென மொழிப. (தொல். 153)
இஃது உயர்தினைப் பெயர் நான்கு கணத்துக் கண்ணும் இருவழியும் முடியுமாறு கூறுகின்றது.
(இ-ள்) உயிரீறாய் வந்த உயர்தினைப் பெயரும் புள்ளி யிறுதியை உடைய உயர்திணைப் பெயரும் நான்கு கணத்திலும் அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லாவிடத்தும் இயல்பாம் என்று சொல்லுவர் எ-று.