உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொகைமரபு 137



   நம்பி எனவும் அவன் எனவும் நிறுத்தி, அல்வழிக்கண் குறியன், சிறியன், தீயன், பெரியன், ஞான்றான், நீண்டான், மாண் டான், யாவன், வலியன், அடைந்தான் எனவும், வேற்றுமைக்கண் கை, செவி, தலை, புறம், ஞாற்சி, நீட்சி, மாட்சி. யாப்பு. வன்மை, அழகு எனவும் ஒட்டுக. ஒருவேன் என நிறுத்தி, குறியேன் தீயேன் என இவ்வாறே ஒட்டித் தன்மைப் பெயர்க் கண்ணும் இயல்பாமாறு காண்க.
   இவற்றுள் வன்கணம் ஒழிந்தவற்றை ‘ளுநமயவ’ (144) என்பதனால் முடிப்பாருமுளர். உயர்தினைப்பெயரையும் விரவுப் பெயரையும் எடுத்தோதியே முடித்தல் ஆசிரியர் வழக்க மாதலின், இச்சூத்திரத்தில் அடக்குதலே பொருத்தமுடையதாம். 
   
   உயிரீறு புள்ளியிறுதி என்பதனால், பல சான்றார், கபில பரணர், இறைவநெடுவேட்டுவர், மருத்துவ மாணிக்கர் என ஈறுகெட்டு முடிவனவும்; கோலிகக்கருவி, வண்ணாரப்பெண்டிர், ஆசிவகப் பள்ளி என ஈறுகெட்டு வல்லெழுத்து உறழ்ந்து முடிவனவுமாய் இயல்பின்றி முடிவன எல்லாம் கொள்வர் உரையாசிரியர்.
     அவற்றுள் 
     இகர விறுபெயர் திரிபிட னுடைத்தே. (தொல். 154) 
   
   இஃது உயர்திணைப் பெயருள் சிலவற்றிற்கு எய்தாது எய்துவித்தது.
   (இ-ள்) முற்கூறிய உயர்திணைப் பெயர்களுள் இகர வீற்றுப் பெயர் இருவழியுந் திரிந்து முடியும் இடனுடைத்து எறு.
   உரையிற் கோடலால் இதனை மிக்க திரிபாகக் கொண்டனர் இளம்பூரணர்.
   இவ்வீற்று உயர்திணைப் பெயர்கள் எட்டிப்பூ, காவிதிப்பூ நம்பிப்பேறு என வேற்றுமையினும், நம்பிக் கொல்லன், நம்பிச் சான்றான், நம்பிப் பிள்ளை என அல்வழியினும் மிக்கன. எட்டி, காவிதி என்பன தேய வழக்காகிய சிறப்புப் பெயர்கள் என்பர் நச்சினார்க்கினியர்.
     அஃறிணை விரவுப்பெயர் இயல்புமா ருளவே. (தொல். 155) 
   இது விரவுப்பெயருள் இயல்பாய் முடிவனவும் உளவென் கின்றது. .
   (இ-ள்) உயர்தினைப் பெயரோடு அஃறிணை விரவிய விரவுப் பெயர் இயல்பாய் முடிவனவும் உள என்பதாம்.

rr.