பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரசோழியம், நன்னூல் ஆகிய இரண்டு நூல்களில் குறிப்பிட்ட மொழி மாற்றங்களை மட்டுமே வருணித்துள்ளாரே தவிர அவராகப் புதிய மாற்றம் எதுவும் கண்டு கூறவில்லை என்ற கருத்து உண்டு. ஆனாலும் சில சொல்லுக்கு வடிவ மாற்றம் புதிதாகக் குறிப்பிட்டுள்ளார். சங்க காலத்தில் தெங்கு (தென்னை) தெங்கம் என்ற மாற்று வடிவத்தைப் பெறும் (தொல். குபு. 10) நன்னூலார் (187) காய் முன் தேம் (தேங்காய் என்ற புதிய வடிவத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனவே ஒற்றுமை வேற்றுமை ஆய்வுக்கான காரணங்கள் மாறுபடலாம்.

 வேற்றுமை ஆய்வில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது நூலமைப்புத் திட்டம் ஆகும். எழுத்ததிகாரத்தைப் பொறுத்த வரையில் முக்கியமானது எழுத்தியலுக்கும் புணரியல்களுக்கும் நடுவே பதவியல் என்ற ஒரு புதிய இயலை நன்னூலார் அமைத்தது. மொழியியல் நோக்கில் பார்க்கும்போது சொல்லியல் ஆய்வின் முன்னோடியாய் உருபொலியன் (Morpho - phonemics) என்ற கருத்தின் விளக்கமாய் இலக்கணக் கோட்பாட்டுப் புதுமையாய் அந்த இயல் அமைந்தது. சிறப்பாகச் சுட்டிக்காட்டத் தகுந்தது. வடமொழித் தொடர்பால் மொழியில் நூற்றுக் கணக்கான சொற்கள் சேர்ந்தாலும் இலக்கணக் கோட்பாட்டு நோக்கில் நன்னூலார் புதுமை செய்ய வடமொழியே துணை செய்தது. உரையாசிரியர்களும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். இங்கு சமூக மொழியியல் நோக்கும் புதைந்துள்ளது. தொல்காப்பியர் ஒன்பது ஒன்பது இயல்களாக அமைக்க நன்னூலார் ஐந்து ஐந்து இயல்களாக அமைத்தது நூலாக்கக் கோட்பாட்டின் திட்டத்தில் அடங்கும். அதற்கும் மேலாக அங்கும் இலக்கணக் கோட்பாடு புதைந்துள்ளது. கவனிக்கத்தகுந்தது. உதாரணமாகத் தொல்காப்பியர் பிறப்பியலைத் தனி இயலாகப் புணரியலுக்கு முன்னால் அமைக்க நன்னூலார் எண், பெயர் முறை பிறப்பு (5) என்று அமைத்தது இலக்கணத்தில் பிறப்பியலின் இடம், இலக்கணக் கோட்பாட்டு மாறுபாட்டைப் புலப்படுத்தும். எனவே நூலாக்க முறையும் விரிவான ஆராய்ச்சிக்கு உரியதாக இன்று கருதப்படுகிறது.

ஒரு நூலின் சிறப்பை அந்த நூல் பிற்காலத்தில் ஆய்வுப் பொருளாக, ஆய்வுக் களங்களாக ஏற்படுத்திய தாக்கத்தாலும் அறியலாம். அந்த ஆய்வின் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் இரண்டு ஆய்வேடுகள் நூல்களாக வெளிவந்துள்ளன. ஒன்று. நன்னூலை மட்டும் முன்னிறுத்திப் பேரா. கோ. விஜயவேணுகோபால் எழுதிய A Modern Evaluation of Nannul (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1968) என்ற ஆய்வேட்டு நூல், முன்னுள்ள இலக்கண நூல்