உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தொல்காப்பியம்-நன்னூல்



     அத்திடை வரூஉம் கலமென் னளவே. (தொல். 168)

இதுவுமது.

   (இ-ள்) கலம் என்னும் அளவுப் பெயர் குறையொடு புணருமிடத்து இடையில் அத்துச் சாரியை வரப்பெறும் எறு.
   (உ-ம் கலம்+அத்துக்குறை = கலத்துக்குறை என வரும்.
     பனையென் அளவுங் காவென் நிறையும் 
     திணையுங் காலை இன்னொடு சிவனும். (தொல்.69)

இதுவுமது.

   (இ-ள்) பனையென்னும் அளவுப்பெயரும் காவென்னும் நிறைப் பெயரும் குறையென்பதனொடு புணருமிடத்து ஆராயுங் காலத்து இன்சாரியையொடு பொருந்தும்.
   (உ-ம்) பனையின் குறை, காவின் குறை எனவரும்.
   ‘நினையுங்காலை என்றதனால் பனைக்குறை, காக்குறை என இன்சாரியை பெறாது வல்லெழுத்து மிகுதலுங்கொள்க என்பர் உரையாசிரியர்.
     அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி 
     உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே;
     அவைதாம் 
     கசதப என்றா நமவ என்றா 
     அகர உகரமோ டவையென மொழிப. (தொல்.170)
   இது முற்கூறிய மூன்றனுள் அளவுப்பெயர்க்கும் நிறைப் பெயர்க்கும் முதலாமெழுத்து இனைத்தென்கிறது.
   (இ-ள்) அளவுப் பெயர்க்கும் நிறைப் பெயர்க்கும் மொழி முதலாக உளவென்று கூறப்பட்டன. ஒன்பது எழுத்தாம்; அவை தாம் க ச த ப க்களும் நமவ க்களும் அகரமும் உகரமுமாகிய அவை என்று கூறுவர். ‘
   (உ-ம்) கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை வட்டி, அகல், உழக்கு எனவும், கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, 19ா, வரை, அந்தை எனவும் அளவுப்பெயர் நிறைப் பெயரும் வந்தன. திறைக்கு உகரமுதற் பெயர் காணப்படவில்லை.
   உளவெனப்பட்ட வென்றதனாலே உளவெனப்படாதன வும் உளவென்று கூறி, அவை இம்மி, ஒரடை, ஒராடை, இடா என வரையறை கூறாதனவுங்கொள்க என்பர் உரையாசிரியர்.