பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தொல்காப்பியம்-நன்னூல்



   நிற்றலும் உரித்தே என்ற உம்மையால், ஐகாரம் நில்லாது கெடுதலும் உரித்தென்பது பெறப்படும். ஐகாரம் கெட்டவழி நின்ற வகரத்தினை வற்றின்மிசை யொற்றென்று கெடுத்து, அவற்றை இவற்றை உவற்றை என முடிப்பர் உரையாசிரியர், இங்ஙனம் ஐகாரமும் மெய்யும் கெட்ட சுட்டுப் பெயர்களை ஐயும் மெய்யும் கெட்ட விறுதி (எழுத்து 183) என்பர் ஆசிரியர். 
   நிற்றலுமுளித்தே என்னும் உம்மையான் வற்றொடு சில வுரு பின்கண் இன்சாரியை பெற்று நிற்றலு முரித்தெனக் கொண்டு, அவையற்றிற்கு அவையற்றின் கண் என நான்காவதும், ஏழாவதும் இன் பெற்று வந்தனவென்றும், வற்றும் இன்னும் உடன் பெறுதலாகிய இவ்விதி ஒன்றென முடித்தலால் பலவற்றிற்கு, பலவற்றின்கண் எனப் பல்லவை துதலிய அகர வீற்றிற்கும் பொருந்துமென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.
   அவ்விதிப்படி வற்றுச் சாரியையின் முதலெழுத்து ஆகிய வகரமெய் கெட்ட நிலையில் அற்று என நிற்றல்பற்றி அதனை அற்றுச் சாரியையெனக் கொண்டார் நன்னூலார் (சூத்திரம் 244)
     யாவென் வினாவின் ஐயென் இறுதியும் 
     ஆயியல் திரியாது என்மனார் புலவர் 
     ஆவயின் வகரம் ஐயொடுங் கெடுமே. (தொல்.178)

இதுவுமது.

   (இ-ள்) யாவென்னும் வினாவுடைய ஐகார வீற்றுச் சொல்லும் முற்கூறிய சுட்டு முதல் ஐகாரம் போல வற்றுப்பெறும் அவ்வியல்பில் திரியாதென்று கூறுவர். அவ்வீற்றிடத்து வகரம் ஐகாரத்தோடு கூடக் கெடும் எறு.
   (உ-ம்) யாவற்றை யாவெற்றொடு எனவரும். 
  
   வகரம் வற்றின்மிசை யொற்றென்று கெடுவதனை ஈண்டுக் கேடு ஒதியவதனால் கரியவை, செய்யவை, நெடியவை, குறியவை எனப் பண்புகொள் பெயராய் வரும் ஐகார வீற்றின் வகரம் ஐயொடுங் கெட்டு வற்றுச் சாரியை பெறுதல் தழுவப்பட்டது என்பர் உரையாசிரியர்.
   (உ-ம்) கரியவற்றை, செய்யவற்றை, நெடியவற்றை, குறியவற்றை எனவரும். 
     நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் 
     ஆவயின் னகரம் ஒற்றா கும்மே. (தொல்.179)
   இஃது ஈகார வீற்றுள் ஒரு மொழிக்கு முடிபு கூறுகின்றது.