பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

தொல்காப்பியம்-நன்னூல்



   (இ-ள்) அ ஆ என்று சொல்லப்படும் ஈற்றினையுடைய மரத்தை உணர நின்ற பெயரோடு புணருங்கால் ஏழாமுருபு முன் கூறிய இன்சாரியையோ டன்றி அத்துச் சாரியையோடும் பொருந்தும் எறு.
   (உ-ம் விளவத்துக்கண், பலாவத்துக்கண் என வரும்.
   வல்லெழுத்து முதலிய (எழுத்து 144) என்பதனால் கண்ணுருபின் முன்னர் வல்லெழுத்து மிக்கது. தெற்றென்றற்றே! (எழுத்து 133 என்ற மிகையால் அத்தின் அகரம் அகரமுனை (125 கெடாதாயிற்று என்பர் நச்சினார்க்கினியர்.
     ஞநவென் புள்ளிக் கின்னே சாரியை, (தொல்.182) 
   இது புள்ளியிறு சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது. 
   (இ-ள்) ஞநவென்று சொல்லப்படுகின்ற புள்ளியிறுகட்கு வருஞ் சாரியை இன் சாரியை எறு.
   (உ-ம்) உரிஞனை, உரிஞனொடு, பொருநினை, பொருநினொடு என வரும்.
     கட்டுமுதல் வகரம் ஐயு மெய்யுங் 
     கெட்ட விறுதி யியற்றிரி பின்றே. (தொல்.183)
   இது வகரவீறு நான்கனுள் சுட்டு முதல் வகரவீற்றிற்கு முடிபு கூறுகின்றது.
   (இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவ், இவ், உவ் என்னும் வகரவீற்றுச் சொல், ஐகாரமும், அதனால் பற்றப்பட்ட மெய்யும் கெட்டு வற்றுப் பெற்று முடிந்த சுட்டு முதல் ஐகார வீற்றினைப் போன்று வற்றுப் பெற்று முடியும் எறு.
   (உ-ம்) அவற்றை, இவற்றை, உவற்றை எனவரும்.
   வவ்விறு கட்டிற் கற்றுறல் வழியே. (நன்.250)

என்பது நன்னுரில்

ஏனை வகரம் இன்னொடு சிவனும். (தொல். 184,

   இது தெவ் என்பதன் முடிபு கூறுகின்றது.
    (இ-ள்) வகரவீற்றுச் சொற்கள் நான்கனுள் சொல்லாது ஒழிந்த தெவ் என்னும் வகர வீறு இன்சாரியை பெற்று முடியும் எ-று.

(உ-ம்) தெவ்வினை, தெவ்வினொடு என வரும்.