உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருபியல் 155

   (உ-ம்) எல்லா நம்மையும், எல்லா நம்மொடும் எனவரும். 
   இங்ஙனம் கூறவே, எல்லாம் என்னும் விரவுப்பெயர் அஃறிணையாய் நின்று உருபொடு புணருமிடத்து முற்கூறியபடி இடையே வற்றுச்சாரியைபெறும் என்றாராயிற்று. எல்லாம் என்னும் விரவுப் பெயர் அஃறிணைக்கண் வருமாயின் இடையே வற்றுச்சாரியையும் உயர்திணைக்கண் வருமாயின் இடையே நம் முச்சாரியையும் பெற்று அவ்வீரிடத்தும் இறுதியில் உம்முச் சாரியை பெறும் என்பதாம்.
   நம்முச்சாரியை பெறுமிடத்து எல்லாம் என்னும் சொல்லின் ஈற்று மகரம், மேற்குத்திரத்துச் சொல்லிய வற்றின் மிசை யொற்றென்று கெடுத்த அதிகாரத்தாற் கெடுக்கப்படு மென்பர் நச்சினார்க்கினியர்.
     எல்லாம் என்பது இழிதினை யாயின் 
     அற்றோ டுருபின் மேலும் முறுமே 
     அன்றேல் நம்மிடை யடைந்தற் றாகும். (நன். 245)

என்ற சூத்திரத்தால் இப்பொருளை நன்னூலார் மேற்கொண்டு கூறியுள்ளார். ஆசிரியர் வற்றுச்சாரியை யெனக்கூறியதனை நன்னூலார் அதன் வகர மெய் சிலவிடத்துக் கெட்டுவருதல் கொண்டு அற்றுச்சாரியையாகத் திரித்துக் கூறினமை காண்க.

     எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியுந் 
     எல்லீரு மென்னும் முன்னிலை யிறுதியும் 
     ஒற்றும் உகரமும் கெடுமென மொழிய 
     நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி 
     உம்மை நிலையும் இறுதி யான 
     தம்மிடை வரூஉம் படர்க்கை மேன 
     நும்மிடை வரூஉம் முன்னிலை மொழிக்கே. (தொல்.191)
   இது மகரவீற்று உயர்தினைப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது. .
   (இ-ள்) எல்லாரும் என்னும் மகரவீற்று உயர்திணைப் படர்க்கைப் பெயரும், எல்லீரும் என்னும் மகரவீற்று உயர் தினை முன்னிலைப் பெயரும் மகரவொற்றும் அதன் முன்னின்ற உகரமுங்கெட்டு முடியுமென்று சொல்லுவர் புலவர். அவ்வுகரங் கெடுவழி அதனால் ஊரப்பட்ட ரகர வொற்றுக் கெடாது முடிதல் வேண்டும். அவ்விரு மொழிக்கும் இறுதிக்கண் உம்முச்சாரியை நிலைபெறும். படர்க்கை யிடத்துத் தம்முச்