இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
156
தொல்காப்பியம்-நன்னூல்
சாரியை இடைவரும். முன்னிலை மொழிக்கு தும்முச்சாரியை இடைவரும் எறு.
(உ-ம்) எல்லார் தம்மையும், எல்லார் தம்மொடும், எல்லீர் தும்மையும், எல்லீர் நும்மொடும் எனவரும்.
‘படர்க்கை, முன்னிலை என்ற மிகுதியால் கரியே நம்மையும், கரியே நம்மொடும் என மகரவீற்றுந் தன்மைப் பெயர் இடைக்கண் நம்முச் சாரியையும் இறுதியில் உம்முச் சாரியையும் பெறும் என்பர் உரையாசிரியர்.
இம் மகரவீற்று உயர்திணை முடியினை,
எல்லாரு மெல்லிரு மென்பவற் றும்மை தள்ளி நிரலே தம்தும் சாரப் புல்லு முருபின் பின்ன ரும்மே. (நன்.249)
என்ற சூத்திரத்தாற் கூறினர் நன்னூலார்.
தான்யான் என்னும் ஆயி ரிறுதியும் மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே. (தொல்.192)
இது னகரவீற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது.
(இ-ள்) தான் யான் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு னகரவீறும் மேல் மகரவீற்றுட் கூறிய தாம் நாம் யாம் என்னும் மூன்று பெயரொடு வேறுபாடின்றித் தான் என்பது ‘தன்’ எனக் குறுகியும், யான் என்பதன் கண் ஆகாரம் எகரமாகி யகரவொற்றுக்கெட்டு என் எனத் திரிந்தும் முடியும் எ-று.
(உ-ம்) தன்னை, என்னை என வரும்.
இங்ஙனம் தாம், தான், நாம் முதல் குறுதலையும், யாம், யான் என்பதில் யகரமெய் கெட்டு ஆகாரம் எகரமாய்த் திரிதலையும், நீ நெடுமுதல் குறுகி னகர வொற்றுப் பெற்று நின் என வருதலையும், .
தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம் நீ நீர் என் எம் நின் நுமாம் பிற குவ்வின் அவ்வரும் நான்காறு இரட்டல. (நன்,247)
என்ற சூத்திரத்தால் பவணந்திமுனிவர் தொகுத்துக் கூறினமை முன்னரும் விளக்கப்பட்டது.
அழனே புழனே ஆயிரு மொழிக்கும் அத்தும் இன்னும் உறழத் தோன்றல் ஒத்த தென்ப உணரு மோரே. (தொல்.193)
இதுவுமது.