பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருபியல் 157

   (இ-ள்) அழன், புழன் ஆகிய அவ்விரு மொழிக்கும் அத்துச் சாரியையும் இன்சாரியையும் மாறிவரத் தோன்றுதலைப் பொருந்திற்றென்பர் அறிவோர் எ-று.
   அழன்+அத்து+ஐ = அழத்தை புழன்+அத்து+ஐ = புழத்தை; அழன்+இன்+ஐ = அழனினை புழன்-இன்-ஐ = புழனினை

எனவரும்,

   அழன்-பிணம், புழன் என்பதன் பொருள் நன்கு விளங்க வில்லை.
   அத்துச் சாரியையொடு புணருமிடத்து நிலைமொழியீற்று னகரம் அத்தேவற்றே (எழுத்து 133) என்ற விதிப்படி அத்தின்மிசை யொற்றென்று கெட்டு முடிந்தது.
   இச் சூத்திரத்துத் தோன்றல் என்றதனால் எவன் என வரும் னகரவிற்று வினாச்சொல்லை எவன் என்றும் என் என்றும் நிறுத்தி வற்றுக் கொடுத்து வேண்டுஞ் செய்கை செய்து எவற்றை, எவற்றொடு எனவும் எற்றை எற்றொடு எனவும் முடித்தல் பொருந்தும் எனவும், ஒத்தது என்றதனால் எகின் எனவரும் னகரவீற்றுச்சொல் உருபொடு புணருங்கால் அத்தும் இன்னும் பெற்று எகினத்தை, எகினினை எனவும், எகினத்தொடு எகிணிைனொடு எனவும் முடியுமென்றும் கொள்வர் உரையாசிரியர்.
     அன்னென் சாரியை யேழன் இறுதி 
     முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப. (தொல்,194) 
   இது ழகாரவீற்று எண்ணுப்பெயர்க்கு முடிபு கூறுகின்றது. 
   (இ-ள்) அன் என்னும் சாரியை ஏழ் என்னும் எண்ணுப் பெயரின் முன்னே தோன்றுமியல்பினை யுடைத்தென்பர் ஆசிரியர். -
   (உ-ம்) ஏழனை, ஏழனின், ஏழற்கு எனவரும், 
   இச்சூத்திரத்தும் ஏழன் இறுதி என அன் சாரியை பெற்றமை காண்க.
     குற்றிய லுகரத் திறுதி முன்னர் 
     முற்றத் தோன்றும் இன்னென் சாரியை. (தொல்.195) 

இது குற்றுகரத்திற்கு முடிபு கூறுகின்றது.

   (இ-ள்) குற்றியலுகரமாகிய ஈற்றின் முன்னர் இன்னென்னுஞ் சாரியை முடியத் தோன்றும் எ-று.