இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உருபியல் 159
செயற்கைய’ என்ற மிகையானே நெடிற் றொடர்க்குற்றிய லுகரத்திற்கே யன்றி உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்திற்கும் முயிற்றை, முயிற்றொடு என இவ்விதி கொள்ளப்படும் என்பர் நச்சினார்க்கினியர்.
எண்ணின் இறுதி அன்னொடு சிவனும், (தொல், 198) இது குற்றுகர வீற்று எண்ணுப்பெயர் முடிபு கூறுகின்றது. (இ-ள்) எண்ணுப் பெயர்களினது குற்றுகர வீறு அன்சாரியையொடு பொருந்தும்.
(உ-ம்) ஒன்றனை, ஒன்றனொடு, இரண்டனை, இரண்டனொடு, என அவ்வீற்று எல்லா எண்ணும் எல்லா உருபொடும் கூடும்.
ஒன்று முதலாகப் பத்துார்ந்து வரூஉம் எல்லா வெண்னுஞ் சொல்லுங் காலை ஆனிடை வரினும் மான மில்லை அஃதென் கிளவி யாவயிற் கெடுமே உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே. (தொல்.199)
இதுவுமிது.
(இ-ள்) ஒன்று முதலாக எட்டீறாக நின்ற எண்களின் மேலே பத்தென்னும் எண்ணுப்பெயர் ஏறி வருகின்ற ஒருபது முதலான எல்லா எண்களையும் முடிபு சொல்லுங் காலத்து முற்கூறிய அன்சாரியையே யன்றி ஆன்சாரியை இடையே வரினும் குற்றமில்லை. ஆன் பெற்றுழிப் பஃது என்னும் எண்ணிடத்து அஃது என்னும் சொல் கெட்டுப்போம். அவ் அகரத்தான் ஊரப்பட்ட மெய் கெடாது நிற்றல் வேண்டும் எறு.
(உ-ம்) ஒரு பஃது இருபஃது முதலாகக் குற்றியலுகரப் புணரியலுள் விதித்தவாறே நின்று அஃதென்பது கெட்டுப் பகர வொற்றுக் கெடாது நின்று ஆன்சாரியை பெற்று ஒரு பஃது + ஐ = ஒருபானை, இருபஃது + ஐ = இருபானை என எல்லாவுருபொடும் கூடி நின்றவாறு காண்க.
ஆசிரியர், ‘ஒன்பான் முதனிலை (463) ஒன்பாற் கொற்றிடை மிகுமே (475) என ஒன்பஃது என்பதன்கண் பகரத்துள் அகரம் பிரித்து அஃதென்பது கெடுத்து ஆன்சாரியை கொடுத்து ஒன்பது என்பதற்கும் இவ்விதி உண்டென்பதனை உடம்போடு புணர்த்துக்கூறியுள்ளார். எனவே ஒன்பஃது என்னும் எண்ணுப் பெயர் உருபொடு புணருமிடத்தும் ஒன்