இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உயிர் மயங்கியல் $3
என வருஞ் சூத்திரங்களால் ஆசிரியர் உணர்த்தியுள்ளார். அகரச் சுட்டிற்குக் கூறிய இவ்விதிகளை,
சுட்டி னியற்கை முற்கிளந் தற்றே. (தொல். 238)
என்ற சூத்திரத்தால் இகரச் சுட்டிற்கும்,
ஏனவை வரினே மேனிலை யியல. (தொல்.256)
என்ற சூத்திரத்தால் உகரச் சுட்டிற்கும் மாட்டேற்றிக் கூறியுள்ளார்.
எனவே மூன்று சுட்டின் முன்னரும் உயிரும் யகரமும் வரின் வகர வொற்றும், க, ச, த, ப, ஞ, ந, ம, வ என்பன வரின் வந்த வெழுத்துக்களும் மிகுமென்பதாம்.
மேற் கூறிய சூத்திரங்களால் தொல்காப்பியனார் கூறிய இவ்விதிகளை,
எகர வினாமுச் சுட்டின் முன்னர் உயிரும் யகரமு மெய்தின் வவ்வும் பிறவரின் அவையுத் துக்கிற் சுட்டு நீளின் யகரமுந் தோன்றுதல் நெறியே. (நன் 163).
என வரும் ஒரு சூத்திரத்தால் தொகுத்துரைத்தார் நன்னூலார்:
1. வல்லெழுத்து மிகுவன
அகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின் தத்த மொத்த வொற்றிடை மிகுமே. (தோல்.203),
இச்சூத்திரம் அகரவீற்றுப் பெயர் அல்வழிக்கண் வன் கணத்தோடு புணருமாறு கூறுகிறது.
(இ-ள்) அகரமாகிய இறுதியையுடைய பெயர்ச் சொல்லின் முன் வேற்றுமையல்லாத விடத்துக் க ச த ப முதல் மொழிகள் வருமொழியாய்த் தோன்றுமாயின் தத்தமக்குப் பொருந்தின அக் க ச த ப க்களாகிய ஒற்று இடைக்கண் மிகும் எறு.
(உ-ம்) விளக்குறிது, நுணக்குறிது, அதக்குறிது, சிறிது, தீது, பெரிது என வரும்.
க ச த ப மிகுதலாகிய இவ்விதியினை,
வேற்றுமைக் கண்ணு மதனோ ஏற்றே. (தொல்.215) ஆகார விறுதி அகர வியற்றே. (தொல்.221) வேற்றுமைக் கண்ணு மதனோ ஏற்றே. (தொல்.225)