உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

தொல்காப்பியம்-நன்னூல்



     ஈகார விறுதி ஆகார வியற்றே.              (தொல்,249) 
     
     வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே.      (தொல்.252) 
     உகர விறுதி அகர வியற்றே.                 (தொல்.254) 
     வேற்றுமைக் கண்ணு மதனோ ஏற்றே.      (தொல்,259) 
     ஊகார விறுதி ஆகார வியற்றே.             (தொல்.254) 
     வேற்றுமைக் கண்ணு மதனோ ஏற்றே.      (தொல்,256)
    ஏகார விறுதி ஊகார வியற்றே. -             (தொல்,274)
     வேற்றுமைக் கண்ணு மதனோ ஏற்றே.      (தொல்,276) 
     ஒகார விறுதி ஏகார வியற்றே.               (தொல்.289)
     வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே - 
     ஒகரம் வருதல் ஆவயி னான.               (தொல்,292)

என வரும் சூத்திரங்களால் முறையே அகர வீற்று வேற்றுமைப் பெயர்க்கண்ணும், ஆ, ஈ, உ, ஊ, ஏ, ஓ, ஈற்று அல்வழி வேற்றுமைப் பெயர்க் கண்ணும் மாட்டெறிந்து கூறினார்.

   மேல், தொகை மரபினுள் இகர ஐகார வீற்றுப் பெயர் அல்வழிக்கண் வல்லெழுத்து வருமிடத்து மிகாது இயல்பாதலும், மிகுதலும், உறழ்தலுமாகிய மூவகை நிலையவென்று கூறினார். ஈண்டு அல்வழியை விலக்கி, இகர ஐகாரமாகிய அவ்விரு வீற்றுப் பெயர்களும் வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகப் பெறு மென்பதனை,
     இகர விறுதிப் பெயர்நிலை முன்னர் 
     வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே.       (தொல்.235)
     ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர் 
     வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே.       (தொல்.280)
     என வரும் இரண்டு சூத்திரங்களாலும் உணர்த்தினார். ஒளகார வீற்றுப் பெயர் அல்வழி வேற்றுமையாகிய ஈரிடத்தும் வல்லெழுத்து மிகுதலோடு அவ்விரு வழியும் உகரம் பெற்று முடியுமென்பதனை,
     ஒளகார விறுதிப் பெயர்நிலை முன்னர் 
     அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் 
     வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே 
     அவ்விரு வீற்றும் உகரம் வருதல் 
     செவ்வி தென்ப சிறந்திசி னோரே,                (தொல்.295)