உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர் மயங்கியல் 185

என்ற சூத்திரத்தாற் குறிப்பிட்டார். எனவே இகர ஐகாரம் நீங்கலாக ஏனைய உயிரீற்றுப் பெயரெல்லாம் அல்வழி வேற்றுமையாகிய சரிடத்தும் வல்லெழுத்து மிகப்பெறுமென்பதும், இகர ஐகார வீற்றுப் பெயர்கள் வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகப்பெறு மென்பதும் கூறினாராயிற்று. எகர ஒகரம் பெயர்க்கீறாகா 273. எனப் பின்னர்க் கூறுவாராகலின் அவ்வீறுகளுக்கு இவ்விதி அமையாதென்பது கொள்ளப்படும்.

(உ-ம்) அல்வழி வேற்றுமை

நுணக்குறிது, சிறிது, தீது, பெரிது.இருவிளக்கொற்றன்,

                                சாத்தன், தேவன், பூதன்,

மூங்காக்கடிது ” ” ” மூங்காக்கால், செவி, தலை, புறம்.

                                 கிளிக்கால், சிறகு, தலை, புறம்.

ஈக்கடிது, ” “ “ ஈக்கால், சிறகு, தலை, புறம்.

கடுக்குறிது கடுக்காய், செதிள், தோல்,

கொண்மூக்கடிது “ “ “ கொண்மூக்குழாம், செலவு,

                                 தோற்றம், பெருமை.

ஏக்கடிது " " " ஏக்கடுமை, சிறுமை, தீமை,

                                 பெருமை. யானைக்கோடு, செவி, தலை, புறம்.

ஒஒக்கடிது " ' " ஒஒக்கடுமை, சிறுமை, தீமை,

                                பெருமை.

கெளவுக்கடிது “ “ “ கெளவுக்கடுமை, சிறுமை, தீமை,

                                பெருமை.
   அல்வழியில் வல்லெழுத்து மிகும் உயிரீற்றுச் சொற்கள்:
     வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும்
     எனவெ னெச்சமும் கட்டி னிறுதியும்
     ஆங்க வென்னும் உரையசைக் கிளவியும்
    ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே,         (தொல்.204) 

என அகர வீற்றிலும்,

      செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியும்
      அவ்வியல் திரியா தென்மனார் புலவர்டி       (தொல். 222)

என ஆகார வீற்றிலும்,