உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர் மயங்கியல் 171

       மூன்றா றுருபெண் வினைத்தொகை கட்டி 
       றாகு முகரம் முன்ன ரியல்பாம். (நன்.179)

எனச் சூத்திரம் செய்தார். நன்னூலார்.

   (உ-ம்) சாத்தனொடு கொண்டான், சாத்தனது கை, ஒரு கலம், இரு கலம், அறு கலம், ஏழு கலம், அடு களிறு எனவரும்.
     தேற்ற வெகரமுஞ் சிறப்பின் ஒவ்வும்
     மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகா. (தொல்.273)
   (இ.ள்) தேற்றப் பொருண்மையில் வரும் எகரமும் சிறப்புப் பொருண்மையில் வரும் ஒகரமும் வல்லெழுத்து மிக்கு முடியாது இயல்பாகும்.
   (உ-ம்) யானேஎ கொண்டேன், நீயேஎ கொண்டாய்
           யானோஒ கொடியன், நீயோஒ கொடியை 

என இயல்பாய் முடிந்தன. “யானோ கொண்டேன்” என்புழி அளபெடை எகரம் தேற்றம். நீயோஒ கொடியை என்புழி அளபெடை ஒகரம் சிறப்புப் பொருளைத் தந்து நின்றது.

   இவ்வாறு தெளிவுபொருண்மையும் சிறப்புப் பொருண்மையும் அல்லாதவிடத்து எகரமும் ஒகரமும் பெயர்ச்சொற்கு ஈறாகாவென்பதும், இவை வினைச்சொல்லுள் முன்னிலையிடத் தனவாய் வருமென்தும்,
     எகர வொகரம் பெயர்க்கீ றாகா 
     முன்னிலை மொழிய என்மனார் புலவர் 
     தேற்றமுஞ் சிறப்பும் அல்வழி யான. (தொல்.272)

என்பதனாற் கூறப்பட்டன. 273-ம் குத்திரத்து மேற் கூறியற்கை வல்லெழுத்து மிகா” என ஆசிரியர் கூறுதலால், 272-ம் சூத்திரமாகிய இதன்கண் கூறப்பட்ட முன்னிலை வினை யீற்றின்கண் வரும் எகர ஒகரங்கள்,

     ஏஎக் கொற்றா, சாத்தா, தேவா, பூதா 
     ஒஒக் கொற்றா, சாத்தா, தேவா, பூதா 

என வல்லெழுத்து மிகப்பெறும் என்று கூறினாராயிற்று.

     மாறுகொள் எச்சமும் வினாவு மெண்ணும் 
     கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். (தொல்.275)

இதனால் ஏகார வீற்று இடைச்சொற்கள் இயல்பாமாறு கூறுகின்றார்.