பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர் மயங்கியல் 177

     ஒளகார விறுதிப் பெயர்நிலை முன்னர்
     அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும்
     வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே
     அவ்விரு வீற்று முகரம் வருதல்
     செவ்வி தென்ப சிறந்திசி னோரே.      (தொல்.295) 

என்ற சூத்திரத்தாற் கூறினார்.

   (உ-ம்; கெளவுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும், கெளவுக்கடுமை சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும்.
   ஏகார வீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் எகர மிக்கு முடியுமென்பதனை,
       ஏயெ னிறுதிக் கெகரம் வருமே. (தொல்.277) 

என்பதனாற் கூறினார்.

   (உ-ம்) ஏஎக்கொட்டில், சாலை, துளை, புழை எனவரும், 
   ஒகார வீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் ஒகரம் பெறுமென்பதனை,
       வேற்றுமைக் கண்ணு மதனோ ஏற்றே 
       ஒகரம் வருத லாவயி னான. (தொல்.292) 

என்ற சூத்திரத்தாற் கூறினார்.

   (உ-ம் கோஒக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவரும். 
     இல்லொடு கிளப்பி னியற்கை யாகும். (தொல்.293)

என்பதனால் ஒகரப் பேறின்றிக் கோயில் என இயல்பாய் வந்தமை யுணர்க.

   ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய உயிர்மிக வரும் புணர்ச்சி பிற்காலத்து வழக்கொழிந்தமையால் இப்புணர்ச்சி முறையினை நன்னூலார் இறந்து விலக்கல் என்னும் உத்தியாற் கூறா தொழிந்தார்.

5. நீடவருதல்

   இனி, குறில், நெடிலாக நீளுதலாகிய திரிபினைப் பெற்றுப் புணர்வனவற்றை முதல் நீளல், இறுதி நீளல் என இருவகையாகப் பிரிக்கலாம். அவற்றுள் முதல் நீண்டு புணர்வது செய்யுளிடத்து வரும் அகரச் சுட்டு ஆகும். இதனை,

தொ.13