உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

தொல்காப்பியம்-நன்னூல்


    (உ-ம்) ஆஉே வின்கை, செவி, தலை புறம், எனவும், சேவின் கோடு, செவி, தலை, புறம் எனவும் வரும்.
    ஆசிரியர் உருபியல், விதியை அ, ஈ, உ, ஐ, ஒ என்பன வற்றினிற்றில் முறையே, 220, 253, 263, 281, 294 ஆகிய சூத்திரங்களில் மாட்டெறிந்து கூறியுள்ளார்.

அகரவீறு

       பலவற் றிறுதி யுருபியல் நிலையும். (தொல். 220 

(இ-ள்) பல்ல, பல, சில, உள்ள, இல்ல எனவரும் பலவற்றை யுணர்த்தும் அகரவீற்றுச் சொற்களின் இறுதி, உருபு புணர்ச்சிக் கண் வற்றுப் பெற்றுப் புணந்தாற்போல உருபினது பொருட் புணர்ச்சிக்கண்ணும் வற்றுச்சாரியை பெற்று முடியுமென்பதாம்.

(உ-ம்; பலவற்றுக் கோடு செதிள், தோல், பூ

       பல்லவற்றுக் கோடு 
 
       சிலவற்றுக் கோடு  
      உள்ளவற்றுக் கோடு 
     இல்லவற்றுக் கோடு 

எனவரும்.

ஈகாரவீறு

         நீயென் ஒருபெயர் உருபியல் நிலையும் 
        ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். (தொல்.253) 
   (இ-ள்) நீ என்னும் ஒரெழுத் தொருமொழி, உருபு புணர்ச்சிக்கண் நெடுமுதல் குறுகி னகர ஒற்றுப்பெற்று நின்றாற் போல ஈண்டுப் பொருட் புணர்ச்சிக் கண்ணும் முடியும். அவ்வாறு முடிவுழி இயைபு வல்லெழுத்து மிகாதென்றவாறு.
   (உ-ம் நின்கை, செவி, தலை, புறம் என வரும். 
  
   இயற்கையாகுமெனவே நிலைமொழித்தொழில் அதிகார வல்லெழுத்தை விலக்காதாயிற்று’ என்பர் நச்சினார்க்கினியர்.

உகரவீறு

       கட்டுமுத லிறுதி யுருபியல் நிலையும் . 
       ஒற்றிடை மிகா வல்லெழுத் தியற்கை. (தொல்.253)
   (இ-ன்) சுட்ழுெத்தினை முதலாகவுடைய உகர வீற்றுச் சொற்கள் பொருட் புணர்ச்சிக் கண்ணும், உருபு புணர்ச்சியிற்