இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உயிர் மயங்கியல் 183
கூறிய இயல்பிலே நின்று அன்சாரியை பெற்று உகரம் கெட்டு முடியும்; வருமொழி வல்லொற்று இடைக்கண் மிகப்பெறா என்பதாம்.
(உ-ம்) அதன் கோடு, செதிள், தோல், பூ
இதன் கோடு, உதன் கோடு
எனவரும்.
ஐகாரவீறு
சுட்டுமுத லிறுதி யுருபியல் நிலையும். (தொல்.281)
(இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுப் பெயர். உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்புபோலப் பொருட் புணர்ச்சிக்கண் வற்றுப்பெற்று முடியுமென்றவாறு.
(உ-ம்) அவையற்றுக் கோடு, செதிள், தோல், பூ
இவையற்றுக் கோடு, உவையற்றுக் கோடு,
எனவரும்,
உருபியல் நிலையும் மொழியுமா ருனவே ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். (தொல்.294)
(இ-ள்) ஒகாரவீற்றுட் சில பொருட்புணர்ச்சிக்கண் உருபு புணர்ச்சியது இயல்பிலே நின்று ஒன்சாரியை பெற்று முடியும் மொழிகளும் உள. அவ்விடத்து வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும் என்பதாம்.
(உ-ம்) கோஒன்கை, செவி, தலை, புறம் எனவரும்.
ஏனைய திரிபுகள்
உயிரீற்றுப் பொருட்புணர்ச்சிக்கண் வரும் ஏனைய திரிபுகளை இனி நோக்குவோம்.
அகரவீற்றுள் சாவ என்னும் செயவென் எச்சத்து இறுதியில் நின்ற வகர யுயிர்மெய்யும், நெடுங்காலம் வாழ்க என்னும் பொருளியில் வரும் வாழிய என்னுஞ் சொல்லின் இறுதியில் நின்ற யகர வுயிர்மெய்யும் கெட்டு முடியும். இதனை,