இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
186
தொல்காப்பியம்-நன்னூல்
பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின் ஐ போ யம்மும் திரள்வரி னுறழ்வும் அட்டுறி னைகெட்டந் நீள்வுமாம் வேற்றுமை, (நன்.203)
எனவரும் இரு குத்திரங்களாலுந் தொகுத்துக் கூறினார்.
பனைமுன் அட்டு வரும் பொழுது ஈற்று ஐகாரம் கெட்டு இடையே ஓர் ஆகாரம் வரும் எனத் தொல் காப்பியர் கூறியதனை விடுத்து, அட்டு என்னும் வருமொழியின் அகரம் ஆகாரமாக நீளுமெனக் கூறினார் நன்னூலார். அவர் கருத்துப்படி, -
(உ-ம்) பனை+அட்டு = பனாட்டு என வரும்.
பல சில என்னும் அகரவீற்றுச் சொற்கள் தம்முன் தாம் வந்து புணருமிடத்து லகரம் றகர வொற்றாகத்திரிந்து முடியுமென்பதனை,
தொடர லிறுதி தம்முற் றாம்வரின் லகரம் றகரவொற் றாகலு முரித்தே. (தொல்.214)
என்ற சூத்திரத்தாற் கூறினார் ஆசிரியர். றகரத்தை யொற்றெனக் குறிப்பிட்டுக் கூறினமையால் முற்கூறிய லகரம் உயிர் மெய்யாதல் தெளியலாம்.
பற்பல, சிற்சில எனவரும், இதனை,
பலசில வெனுமிவை தம்முன் தாம்வரின் இயல்பு மிகலும் அகர மேக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலும் உளபிற. (நன்.170)
என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார்.
இகரவீற்றுச் சொல்லாகிய இன்றி யென்னும் வினையெச் சத்து இகரம் செய்யுளுள் உகரமாய்த் திரியுமென்பதனை,
இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி நின்ற இகரம் உகர மாதல் தொன்றியன் மருங்கிற் செய்யுளு ளுரித்தே. (தொல்,237)
என்ற குத்திரத்தாற் கூறினார் தொல்காப்பியனார்.
(உ-ம்; “உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே.” எனவரும் இன்றி யென்பது போல அன்றி யென்பதும் உகரமாய்த் திரிந்து வருமெனக் கொண்ட நன்னூலார்,