இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
மூன்றதிகாரங்களும் அக்காலத்துள்ளன போலும்” எனச் சங்கர நமச்சிவாயர் தங்கருத்தை வெளியிடுதலானும், தமிழ் நன்னுற்றுறைக ளஞ்சுக் கிலக்கியம்’ என வரும் பெரிய திருமொழித் தனியனுக்கு “தமிழுக்கு எழுத்து முதலான அஞ்க லக்ஷனத்தையும் வெளியிடுவதான நன்னுலென்று ஒரு சர்த்திரம் உண்டு” என அதன் உரையாசிரியரான ஸ்ரீ பிள்ளை லோகாரிய சீயர் உரை கூறிப்போதலானும், இந்நன்னூல் ஐந்ததிகாரங்களையும் உடையதாகவே செய்யப்பட்டிருத்தல் வேண்டுமென்பது அறியப்படும்.
இவ்வாறன்றி, ஆசிரியர் தொல்காப்பியனார் போலப் பவணந்தியாரும் தம் நூலை எழுத்து. சொல். பொருள் என மூன்றதிகாரமாகக் கொண்டு, மூன்று கடவுளராயு முள்ளோன் அருகதேவனே யென்னுந் தம் சமயக் கொள்கைக்கேற்ப அம்மூன்றதிகாரத்தின் முன்னரும் அம்மூவர்க்கும் வணக்கங் கூறினரெனச் சமணர் சிலர் கூறுவர். இவ்விரு கொள்கைகளுள் அதிகார வேறுபாடிருப்பினும் நன்னூல் ஐந்திலக்கணத்தையு முணர்த்த வெழுந்த தென்பதில் ஐயமில்லை. எனினும் பிற்காலத்து இந்நூலின் எழுத்ததிகாரம் சொல்லதிகாரமாகிய இரண்டதிகாரந் தவிர ஏனைய பகுதி காணப்படாமையின் அது கொண்டு இந்நூலைச் சிற்றதிகாரமென்று பின்னுள்ளார் வழங்குவாராயினர்.
உரியியலிற் “பிங்கலமுதலா நல்லோர் உரிச்சொலினயந்தனர் கொளலே” என உரிச்சொற்களின் விரிவைப்பிங்கல நூலிற் கண்டுகொள்கவென விதித்தலால் இவ்வாசிரியர் பிங்கல நூலார் காலத்திற்குப் பிற்பட்டவராதல் வேண்டும். “பைங்கண், பைந்தார். காரா. சேதா என்றாற்போலும் பண்புத்தொகையாகிய சொற்களைப் பசுமை, கருமை, செம்மையெனப் பண்புப் பெயராக நிறுத்தி, ஈற்றுயிர் மெய்யும் ஈற்றயலுயிருங் கெட்டு வருமொழிக்கேற்ப ஒற்றுத்திரிந்துந் திரியாதும் ஆதி நின்ற அகரம் ஐகாரமாயுந் திரிந்தனவென்றும், ஈற்று உயிர் மெய்யும் ஈற்றயலுயிருங்கெட்டு ஆதி நீணடதென்றும், ஈற்றுயிர் மெய்யும் இடையிலொற்றுங் கெட்டு ஆதி நீண்டதென்றும் பின்னுள்ளோர் சந்திமுடிக்கின்றது பொருந்தாது’ என நச்சினார்க்கினியர் கூறியதனை “ஈறுபோதல் இன்ட்யுகர மிய்யாதல்” எனவரும் இந்நூற் சூத்திரத்தின் மறுப்பாகக் கொண்டு, பவணந்தியார் நச்சினார்க்கினியர் காலத்திற்குச் சிறிது முற்பட்டவராதல் வேண்டுமென மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் குறித்துள்ளார்கள்.
இறையனா ரகப்பொருட் பாயிரத்திலும் தொல்காப்பியப் பாயிரவுரைகள் முதலியவற்றிலும் சூத்திரங்களாகவும் உரை நடைகளாகவும் வருவனவே நன்னூலிற் பொதுப்பாயிரப் பகுதியாக எடுத்தாளப்பட்டிருத்தல் வேண்டுமென்பர் அறிஞர். மயிலைநாதர், தொல்காப்பிய உரையாசிரியர்களைப் போலவே இந்நூற் சிறப்புப் பாயிரத்திற்கும் அதனுரைக்கும் இடையே பொதுப்பாயிரப் பகுதியை அமைத்திருத்தலானும், இப்பாயிரத்தின் சூத்திரத் தொகை நன்னூற் சூத்திரத் தொகைகளைக் குறிப்பிடும் இரண்டு வெண்பாக்களிலும் சேர்க்கப்படாமை யானும் இக்கொள்கை வலியுறுகின்றது.
பூவனந்தியார் தரம் செய்யும் நூலுள் "முன்னோர் மொழி பொருளேயன்றி யவர்மொழியும் பொன்னேபோற் போற்றுவம்” என்பதற்கேற்ப்த் தொல்காப்பியம் முதலிய பழையநூற் சூத்திரங்களைத் தானெடுத்து மொழிதலாகக் கொண்டு கூறியுள்ளார். இவராற் செய்யப்பட்ட நன்னூல் பெரும்பாலும் தொல் களப்பியத்தையே அடியொற்றிச் சேறலின் அதன் வழி நூலெனக் கொள்ளுதற் கேற்புடையதாகும். இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனாராற் செய்யப்பட்ட நூலை முதனூலாக வைத்துக் கொண்டு, அதனுட் கூறிய பொருள்முடிபு முழுவதும் ஒத்து முடியப்பூவணந்தியார் “பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல் கலவகையினானே’ எனத் தாம் கூறியதற்கேற்ப ஆசிரியர் தொல் காப்பியணர் காலத்து வழங்கிப் பிற்காலத்து வழக்கு வீழ்ந்தனவற்றை இறந்தது விலக்கலென்ற உத்தியால் விலக்கியும். அவர் காலத்து வழங்காது தம் காலத்துப்