இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புள்ளி மயங்கியல் 191
பின் ’ ’ ” பின்னுக்கடிது, பன் ” ” ” பன்னுக்கடிது, கன் ” ” ” கன்னுக்கடிது, வல் ” ” ” வல்லுக்கடிது, தெவ் “ “ “ தெவ்வுக்கடிது, புள் ” “ “ புள்ளுக்கடிது வள் “ “ “ வள்ளுக்கடிது,
ஞான்றது, நீண்டது. மாண்டது, வலிது என அல்வழியிலும்,
ஈம் + கடுமை = ஈமுக்கடுமை, கம் + கடுமை = கம்முக்கடுமை, உரும் + கடுமை = உருமுக்கடுமை, மின் + கடுமை = மின்னுக்கடுமை, பின் + கடுமை = பின்னுக்கடுமை, கன் + கடுமை = கன்னுக்கடுமை, எகின் + கால் = எகினக்கால், கன் + குடம் = கன்னக்குடம், வல் + கடுமை = வல்லக்கடுமை, வல் + பலகை = வல்லப்பலகை, வல் நாய் = வல்லநாள், தெவ் + கடுமை = தெவ்வுக்கடுமை, புள் + கடுமை = புள்ளுக்கடுமை, வள் + கடுமை = வள்ளுக்கடுமை,
ஞாற்சி, நீட்சி, மாட்சி, வன்மை. என வேற்றுமையிலும் வந்தன. இங்ஙனம் உகரம் பெற்றும் சில விடத்து அகரம் பெற்றும் வரும் புள்ளியீற்றுப் பெயர்ச் சொற்களாகிய இவற்றை ஆசிரியர் பவணந்தியார்,
ஈமுங் கம்மு முருமுந் தொற்பெயர் மானும் முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே. (நன்.223)
மரமல் லெகின்மொழி யியல்பும் அகரம் மருவ வலிமெலி மிகலு மாகும். (நன்.215)