உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

தொல்காப்பியம்-நன்னூல்



     மின் பின் பன் கன் தொழிற்பெய ரனைய
     கன்னல் வேற்று மென்மையோ டுறமும், (நன்.217) 
     வல்லே தொழிற்பெய ஏற்றிரு வழியும் 
     பலகை நாய்வரினும் வேற்றுமைக் கவ்வுமாம். (நன்.231) 
     தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே 
     மவ்வரின் வஃகான் மவ்வு மாகும். (நன்.236) 
     புள்ளும் வள்ளுந் தொழிற்பெயரு மானும் (நன்.234)

எனவரும் இச்சூத்திரங்களால் எடுத்தோதி முடித்துள்ளார்.

   ஈண்டு ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துப்படி ஈமக்குடம், கம்மக்குடம் என அக்குச்சாரியை பெற்றனவற்றைப் பவணந்தியார் தமது கொள்கைக் கேற்ப அகரச் சாரியை பெற்றவனாகக் கூறியதும், தெவ் என்னும் வகரவீற்றுச் சொல் மகரமுதன் மொழி வருமிடத்து,
       தெம்முனை யிடத்துச் சேயர்கொல்’ 

என மகரமாகத் திரிந்துவரும் இலக்கியம் கண்டு மவ்வரின் வஃகான் மவ்வுமாகும் (235) என இலக்கணம் விதித்தலும் கூர்ந்து நோக்கத்தக்கனவாகும்.

2. இறுதிகெட்டு முடிவன

     வெரிநெ னிறுதி முழுதுங் கெடுவழி 
     வருமிட னுடைத்தே மெல்லெழுத் தியற்கை. (தொல்.300) 
     ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. (தொல்.301) 
     இவற்றின் பொருள்:- வெரிந் என்னும் சொல்லின் இறுதியாகிய நகரவொற்று, தான் முன்பெற்ற அகரத்தொடும் கெட, வல்லெழுத்து வருமிடத்து அதற்கேற்ற மெல்லெழுத் தாயினும் வல்லெழுத்தாயினும் மிக்கு முடியும் என்பதாம். 

(உ-ம்) வெரிங்குறை, செய்கை, தலை, புறம்

       வெரிக்குறை,       "            "        "      எனவரும். 
       மகர விறுதி வேற்றுமை யாயின் 
       துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே. (தொல்.310) 

இதன் பொருள்:- மகரவீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் ஆயின் ஈற்று மகரம் முற்றக் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்குமுடியும் என்பதாம்.

   (உ-ம்) மரக்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.