பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

தொல்காப்பியம்-நன்னூல்



       ஆனும் பெண்ணும் அஃறிணை யியற்கை.       (தொல்.313) 
       கிளைப்பெய ரெல்லாம் கொளத்திரி பிலவே.     (தொல்.317)
       முரனென் றொழிற்பெயர் முதலியல் நிலையும்.  (தொல்,319)

எனவும்,

       குயினென் கிளவி இயற்கை யாகும்.            (தொல்.335)
       கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல.   (தொல்.338)
       தானும் பேனும் கோனு மென்னும் 
       ஆமுறை இயற்பெயர் திரிபிடன் இலவே.        (தொல்.351)

எனவும்,

      நெடியதன் இறுதி இயல்புமா ருளவே.            (தொல்.370)
       நெடியதன் இறுதி இயல்பா குநவம்
      போற்றல் வேண்டு மொழியுமா ருளவே, (தொல். 400)

எனவும் வரும் நூற்பாக்கள் முறையே உணர்த்தி நிற்றல் கானலம்.

   (உ-ம்   ஆண்கை,   செவி,   தலை,    புறம் 
            பெண்கை,   செவி,  தலை,     புறம் 
            உமண்குடி,  சேரி,   தோட்டம், பாடி 
            முரண்கடிது, சிறிது, தீது,       பெரிது

எனவும்,

       குயின் குழாம், செலவு, தோற்றம், மறைவு
       எயின்குடி, சேரி, தோட்டம், பாடி

எனவும்,

       தான்றந்தை, பேன்றந்தை, கோன்றந்தை 
       தான்.கொற்றன், பேன்கொற்றன், கோன்கொற்றன்

எனவும்,

       பால்கடிது, சிறிது, தீது, பெரிது 
       கோள்கடிது, சிறிது, தீது, பெரிது

எனவும் வரும்.

       னகர, னகர, லகர, ளகர மெய்கள் வேற்றுமைக்கண் வல்லெழுத்து வருவழிச் சிலவிடங்களில் இங்ஙனம் திரியாது இயல்பாய் வருதலை,