பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

புதுவதாக வந்து வழங்குவதனை எதிரது போற்றல் என்னும் உத்தியால் தழுவியும் மரபுநிலை திரியா வேறுபாட்டுடன் இந்நன்னுலைச் செய்துள்ளார். இங்ஙனந் திரிபு வேறுடைத்தாக இவராற் செய்யப்பட்ட நன்னூலும் தொல்காப்பியத்தோடு பொருளான் ஒருங்கு ஒத்தலின் வழிநூலென்றதற் கேற்புடையதாகுமென்ப,

 மரபுநிலை திரியாவாறு தொல்காப்பியத்தின் வேறாக இவர் கூறிய திரியினை, ‘திரிபுடையவாயினும் மரபுநிலை திரியாதன யாவையெனின்:செய்யுளியலுள் கூறிய ஒற்றளபெடையை அளபெடையதிகாரப்பட்டமை நோக்கி உயிரளபெடையைச் சாரவைத்துக் கூறுதலும், தனிநிலை, முதனிலை, இடைநிலை, ஈறு எனும் நால்வகையிடத்தை மூன்றிடமென அடக்குதலும், “மெல்லெழுத்து மிகுத லாவயினான்’ என்றவாறே தங்கை நங்கை எங்கை, செவி தலை, புறம் என மகாரங்கெட்டு ‘இனமெல்லெழுத்து மிகுமென்னாது மகரமே இனமெல்லெழுத்தாகத் திரியுமென்றலும்."அகமென்கிளவிக்குக் கைமுன்வரினே, முதனிலையொழிய முன்னவைகெட்டு, மெல்லெழுத்து மிகுமென்னாது அங் கையென்புழிக் ககரவகரங்கெட்டு மகரந்திரிந்து முடியுமென்றலும், “முதலீரெண்ணி னொற்று ரதரமாகும்” “இடைநிலை ரகர் மிரண்டெ னெண்ணிற்கு நடைமருங்கின்று” என்றவாறே கூறாது “இரண்டனொற்றுயிரேக” நின்ற ரகர வொற்றின்மேல் உகரம்வந்து செய்கைப்பட்டு முடியுமென்றலும், நாகியாதென யகரம் வருவழி உகரங்கெட்டு இகரந்தோன்று மென்னாது உகரமே இகரமாய்த்திரியு மென்றலும், நெடுமுதல் குறுகும் மொழிகளின் முன் பொதுப்பட ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும் ஆகரம் நிலையுமெனக்கூறி “ஆறனுருபின் அகரக்கிளவிஈறாககரமுன்னக் கெடுதல் வேண்டும்” என்னாது “குவ்வின் அவ்வரும்” என்றொழித்லும், ஆடிக்குக் கொண்டர்னென்புழி இக்குச்சாரியை யென்னாது குச்சாரியை யென்றலும், வற்றுச்சாரியை வகரங்கெட்டு அற்றென நிற்குமென்னாது அற்றுச் சாரியை யென்றேகோடலும், இன்னென்சாரியை இற்றெனத் திரியுமென்னாது இற்றென்பது வேறு சாரியையெனக் கோடலும், அக்கென்சாரியை மெய்ம்மிசை யொடுங்கெடும் என்னாது அகரச்சாரியையெனக் கோடலும், அஆவ என மூன்றும் பலவறி சொல்லென்னாது உண்குவ, உறங்குவ என்புழி வகரத்தை வேறு பிரித்து இடைநிலையெனக் கொண்டு அகர விகுதியென்ற்ொழிதலும். இன்ன்ோர்ன்னவை பிறவுமாம்” என ஆசிரியர் சிவஞான சுவாமிகள் பாயிர விருத்தியின்கண் எடுத்துக்காட்டியுள்ளார். மேல் எடுத்துக் காட்டியவற்றுள் உண்குவ உறங்குவ என்புழி வகரத்தை வேறு பிரித்து அகர விகுதியெனக் கொண்டது. நன்னூல் சொல்லதிகாரப் பகுதியின் கண்ணதாகும். ஒழிந்த திரிபெல்லாம் எழுத்ததிகாரத்துள் நன்னூலாசிரியரால் திரித்துக்காட்டிய பகுதிகளாகும்.
 இங்ஙனந் தொல்காப்பியத்தின் முடிபுகள் மாறுபடாவாறு திரிபு கூறிய பவணந்தியார், சிலவிடத்துத் தாம் செய்யும் நூல் தொல்காப்பியத்திற்கு வழிநூலாதற்கு ஏலாவாறு மாறான சில விதிகளைத் தம் நூலிற் சேர்த்துரைத்துள்ளார் என்பதும் உற்றுணரத் தக்கது. இங்ஙனம் தொல்காப்பியத்தின் பொருண்முடிபு மாறுபட இவர் வழுவிக் கூறிய இடங்களைச் சிவஞான சுவாமிகள், ‘இனிச்சார்ந்துவரன் மரபின் மூன்றலங்கடையே” எனவும். “சார்ந்து வரினல்லது தமக்கியல்பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்” எனவும் வரையறுத்தோதியவாறே சார்பெழுத்து மூன்றென்னாது, சில உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக் களையும் உடன்சேர்த்து எண்ணுதலும், தன்மைச் சொல்லை உயர்திணை யென்னாது விரவுத்திணையெனச் சாதித்தலும், இன்னுமிவைபோல்வனவும் மரபுநிலை திரிதலின் வழிநூல் சார்புநூல் ஆதற்கு ஏலாவாய் இழுக்குப்படுமென்பது” எனப் ப்ரீபிரவிருத்தியுள் விளங்கிக் கூறினார்.
 செந்தமிழ் வழங்கும் தமிழ்நாட்டின் பகுதியாய பன்னிரு நிலத்தினுள்ளும் ஒரு பகுதியிலுள்ளார் குறித்த சிறப்புப் பொருளில் வழங்கும் சொற்கள். அவர்