இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
202
தொல்காப்பியம்-நன்னூல்
(உ-ம்) ஈம் + குடம் = ஈமக்குடம், சாடி, தூதை, பானை
கம் + ” = கம்மக்குடம், ” ” ”
தாழ் + கால் = தாழக்கோல், “ “ “
தமிழ் + கூத்து = தமிழ்க்கூத்து, சேரி, தோட்டம், பள்ளி எனவரும்.
ஈம், கம, தமிழ், தாழ் எனவரும் இச்சொற்கள் சாரியை பெற்று முடிவதனை,
ஈமும் கம்மும் உருமும் தொழிற்பெயர் மானும் முதலன வேற்றுமைக்கு அவ்வும் பெறுமே. (நன்.223)
எனவும்,
தமிழல் வுறவும் பெறும்வேற் றுமைக்கே தாழுங் கோல்வத் துறுமேல் அற்றே. (நன். 225)
எனவும் வருஞ் சூத்திரங்களால் நன்னூலாசிரியர் விரித்துக் கூறியுள்ளார். தொல்காப்பியனார் கொண்ட ‘அக்கு என்னும் சாரியையைப் பவணந்தியார் பின்னுள்ள ஒற்றும் உயிர்மெய்யும் கெடுத்து அகரச்சாரியையாகக் கொண்டமை இங்கு நினைக்கத் தகுவதாம்.
வெயில், இருள் என்னும் லகர, ளகரவீற்றுச் சொற்கள் இரண்டும் அத்துச் சாரியையும் இன் சாரியையும் பெற்று முடியும். இச்சாரியைப் பேற்றினை,
வெயிலென் கிளவி மழையியல் நிலையும் (தொல்,377) இருளென் கிளவி வெயிலியல் நிலையும். (தொல்.402)
எனவரும் மாட்டேற்றுச் சூத்திரத்தில் விதித்தல் காணலாம்.
(உ-ம்) வெயில் + கொண்டான் = வெயிலத்துக்கொண்டான்
வெயில் + கொண்டான் = வெயிலிற்கொண்டான் இருள் + கொண்டான் = இருளத்துக்கொண்டான் இருள் + கொண்டான் = இருளிற்கொண்டான்
சென்றான், தந்தான், போயினான்.
எனவரும்,
மகரவீற்று நாட்பெயர்க்கிளவி இறுதி மகர வொற்றுக் கெட்டு, இகரவீற்று நாட்பெயர் போன்று ஆன்சாரியையும் அவ் ஆன் சாரியைமேல் அத்துச் சாரியையும் பெற்று முடியும். இதனைக் கூறுவது,