உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புள்ளி அங்கியல் 203

      நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன 
      அத்தும் ஆன்மிசை வரைநிலை யின்றே 
      ஒற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர்     (தொல்.331)

எனவரும் சூத்திரமாகும்.

   (உ-ம்) மகம்+கொண்டான்=மகத்தாற்கொண்டான்,
                                  சென்றான், தந்தான், போயினான்

எனவரும்.

      இதன்கண், அத்தும் என்பதில் உம்மையை அத்து ஆன் மிசையும் வரைநிலையின்று என மாறிக்கூட்டி, அத்துச்சாரியை மேலும் பிறசாரியை மேலும் வருதல் நீக்கும் நிலைமையின்று’ எனப் பொருள் கூறி,
     மகம்+ஞான்றுகொண்டான்-மகத்து ஞான்றுகொண்டான், சென்றான், தந்தான், போயினான் என உதாரணங்காட்டுவர் நச்சினார்க்கினியர்.
    ஆகாயத்தை புணர்த்தும் விண்’ என்ற னகர வீற்றுப் பெயர் செய்யுளில் வருங்கால் அதன்முன் வினைச்சொல் வரு மொழியாக வருமிடத்தும், தனித்தும் அடையடுத்தும் வந்த ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர் பிற எண்களோடு புணருமிடத்தும் அத்துச்சாரியை பெற்று முடியும் என்பது, 
     விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின் 
     உண்மையு முரித்தே அத்தென் சாரியை
     செய்யுள் மருங்கிற் றொழில்வரு காலை. (தொல்,305) 
  
     அத்தொடு சிவனும் ஆயிரத் திறுதி 
     ஒத்த வெண்னு முன்வரு காலை.          (தொல்.317)
     அடையொடு தோன்றினும் அதனோ ஏற்றே. (தொல்.318) 

எனவரும் சூத்திரங்களாற் புலனாம். -

   (உ-ம்) “விண்ணத்துக் கொட்கும் வண்ணத்தமரர்” எனவும்,
   ஆயிரத்தொன்று, பதினாயிரத்தொன்று, நூறாயிரத் தொன்று எனவும் வரும்.

8. உருபியல் விதிகள்

    மகரவீற்றுள் எல்லாரும் என்னும் படர்க்கைப் பெயரும்,‘எல்லீரும் என்னும் முன்னிலைப் பெயரும், கிளைத் தொடர்ச்சிப் பொருளை யுடையனவாய் நெடுமுதல் குறுகி