உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புள்ளி மயங்கியல் 205

     எல்லாம் + கோடு = எல்லாவற்றுக்கோடும், செவியும், தலையும், புறமும் (ஈண்டுச் சாரியைபெற்றவழி மகரம் வற்றின் மிசை ஒற்றாதலாற்கெட்டது)
     எல்லாம் குறிய = எல்லாங் குறியவும், சிறியவும், தீயவும், பெரியவும் எனவும் வரும்.
     “எல்லாம் என்னும் பெயர், உயர்திணையாய் நிற்குமிடத்து இடையே நம் என்னும் சாரியையும் இறுதியில் ‘உம்’ என்னும் சாரியையும் பெற்று உருபு புணர்ச்சியின் இயல்பிற்றாய் முடியும். இதனை,
        உயர்திணை யாயின் உருபியல் நிலையும்,        (தொல்.324) 

எனவரும் சூத்திரத்தால் உணர்த்தினார்.

     அவ், இவ், உவ், என்னும் வகரவீற்றுச் சுட்டுப்பெயர்கள் உருபு புணர்ச்சியிற்போலப் பொருட் புணர்ச்சியிலும் வற்றுச் சாரியை பெற்று முடிவன. இதனைக் கூறுவது, 
       சுட்டுமுத லாகிய வகர விறுதி 
       முற்படக் கிளந்த உருபியல் நிலையும்,             (தொல்.378) 

எனவரும் சூத்திரமாகும்.

   (உ-ம்) அவ்+கோடு-அவற்றுக்கோடு,   செவி,   தலை,   புறம்
           இவ்+கோடு-இவற்றுக்கோடு,     "          "         "
            உவ்+கோடு-உவற்றுக்கோடு     "          "         "

எனவரும்.

     ஏழென்னும் எண்ணுப்பெயர், உருபொடு புணருமிடத்து அன்சாரியை பெற்று முடிதல்போல, ஈண்டுப் பொருட் புணர்ச்சியினும் அன்சாரியை பெற்று முடியும் என்பது,
       ஏழென் கிளவி யுருபியல் நிலையும்,         (தொல்.388)

என்பதனால் உணர்த்தப்பட்டது.

     (உ-ம்) ஏழ்+காயம்=ஏழன்காயம், சுக்கு, தோரை, பயறு எனவரும். ஏழன்காயம்-ஏழனாற் கொண்டகாயம் என விரியும். 
  
    ‘தான் என்னும் விரவுப்பெயரும், ‘யான் என்னும் உயர்திணைப் பெயரும் உருபியலிற் கூறியபடி, தான் என்பது நெடு முதல் குறுகித் தன் என்றும், யான் என்பது ஆகாரம் எகரமாய் யகரங் கெட்டு ‘என்’ என்றும் திரிந்து முடியும். இத்திரிபினை யுணர்த்துவது,