இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
206
தொல்காப்பியம்-நன்னூல்
தான்யான் எனும்பெயர் உருபியல் நிலையும், (தொல்.352)
எனவரும் சூத்திரமாகும்.
(உ-ம்) தான் + கை = தன்கை, செவி, தலை, புறம்
யான் + கை = என்கை, “ ” எனவரும்.
இவ்வாறு வேற்றுமையுருபு புணர்தற்கண் சொல்லப்பட்ட விதிகள் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஒக்கும் என்பதனை,
உருபின் முடிபவை ஒக்குமப் பொருளினும். (நன்.238)
எனவரும் சூத்திரத்தால் நன்னூலார் தழுவிக்கொண்டார்.
7. திரிந்து முடியும் ஈறுகள்
னகார ணகார வீற்றுப்பெயர்கள் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து ஈற்றிலுள்ள ணகார ளகாரங்கள் டகரமாய்த் திரிந்து முடிவன. இத்திரிபினை, -
னகார விறுதி வல்லெழுத் தியையின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே. (தொல்.302) ளகார விறுதி ணகார வியற்றே. (தொல்.396)
எனவரும் சூத்திரங்களால் ஆசிரியர் குறித்துள்ளார்.
(உ-ம்) மண்+குடம் = மட்குடம், சாடி, துரிதை, பானை எனவும்
முள்+குறை முட்குறை, சிறை, தலை, புறம்
எனவும் வரும்.
இனி, ணகார லகார வீற்றுப் பெயர்கள், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வல்லெழுத்து வருமொழியாய் வந்து இயையின் றகரமாய்த் திரிந்து முடிவன. இத்திரிபினை உணர்த்துவன,
னகார விறுதி வல்லெழுத் தியையின் றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே. (தொல். 331) லகார விறுதி ணகார வியற்றே. (தொல்.368)
எனவரும் நூற்பாக்கள்.
(உ-ம்) பொன் + குடம் = பொற்குடம், சாடி துதை, பானை எனவும், கல் + குறை = கற்குறை, சிறை, தலை, புறம்