பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

தொல்காப்பியம்-நன்னூல்



எனவரும். இத்திரியினை,

      நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் 
      அல்வழி யானும் றகர மாகும்.               (நன்.232) 

என்ற சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார்.

   இனி, அல்வழிக்கண் வரும் லகர, ளகர வீற்றுச் சொற்கள் இயல்பாயும் ஒருகால் றகர, டகர மாகத் திரிந்து வருதலாகிய உறழ்ச்சி முடிபினையும் பெறுவன என்பது,
     அல்வழி யெல்லாம் உறழென மொழிப.       (தொல். 368) 
     
     அல்வழி யெல்லாம் உறழென மொழிப.       (தொல். 398) 

எனவரும் சூத்திரங்களாற் புலனாம்.

(உ-ம் கல்+குறிது = கற்குறிது -

      முள்+கடிது - முட்கடிது.       சிறிது, தீது, பெரிது, 

எனவரும். இவ்வுறழ்ச்சி முடிபினை நன்னூலார்,

      ‘லளவேற் றுமையிற் றடவும் அல்வழி 
       அவற்றோ டுறழ்வும் வலிவரினாம்        (நன்.227) 

என்ற வரிகளாற் குறித்தார்.

   ளகரவீற்றுட் சில சொற்கள் இங்ஙனம் அல்வழியில் உறழாது வேற்றுமையிற் போன்று திரிந்து முடிவன உள என்பது,
       நெடியத னிறுதி இயல்பா குநவும் 
       வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும் 
       போற்றல் வேண்டும் மொழியுமா ருளவே.      (தொல்.400) 

என்ற சூத்திரத்தின் இரண்டாமடியிற் குறிக்கப்பட்டது.

(உ-ம் புட்டேம்பப் புயன் மாறி (பட்டினப்பாலை-5)

என ளகரம் அல்வழியில் திரிந்தமை காண்க.

     அவ், இவ், உவ் என்ற சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம் வருமொழி முதற்கண் மெல்லெழுத்து முதன் மொழிவரின் வந்த மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும்.
    (உ-ம்) அவ்+ஞாண்=அஞ்ஞாண். 
   
     னகரவீற்றுள் வரும் மன், சின், ஆன், ஈன், பின், முன் என்ற சொற்களும், செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சமும், அவ்வயின் இவ்வயின் உவ்வயின் எவ்வயின் என ஏழாம் வேற்றுமை யிடப்பொருளுணர்த்தி வரும் இடைச்சொற்களும்  ஆகியவற்றின் இறுதி னகரம் றகரமாகத் திரியும் என்பது,