இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புள்ளி மயங்கியல் 209
மன்னுஞ் சின்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் அன்ன இயல என்மனார் புலவர். (தொல்,333) கட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும் அப்பண்பு நிலையும் இயற்கைய என்ப, (தொல்.334)
எனவரும் சூத்திரங்களால் விளக்கப்பட்டது.
(உ-ம்) அதுமற் கொண்கன் றேர்’
‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை (அகம் - 7)
ஆன் + கொண்டான் = ஆற்கொண்டான்.
ஈன்; ” ஈற்கொண்டான்.
பின் ” பிற்கொண்டான்.
முன்” முற்கொண்டான்.
சென்றான், தந்தான், போயினான்.
வரின் + கொள்ளும் = வரிற்கொள்ளும்,
செல்லும், தரும், போம்.
அவ்வயின் + கொண்டான் = அவ்வயிற்கொண்டான் இவ்வயின் + " இவ்வயிற் " உவ்வயின் " உவ்வயிற் "
எவ்வயின் ” எவ்வயிற் "
சென்றான், தந்தான், போயினான் எனவரும்.
‘மீன் என்னுஞ் சொல் திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியும் என்பது,
மீனென் கிளவி வல்லெழுத் துறழ்வே. (தொல்,339)
என்பதனாற் புலனாம்.
(உ-ம்) மீன் + கண் = மீன் கண்; சினை, தலை, புறம்
மீன் + கண் = மீற் கண்; சினை, தலை, புறம்
எனவரும். இவ்வுறழ்ச்சி முடிபு வேற்றுமைப் புணர்ச்சிக்கண் நிகழ்வதென்பது,
மீன்றவ் வொடுபொரூஉம் வேற்றுமை வழியே (நன்.213)
எனவரும் நன்னூற் குத்திரத்தால் விளக்கப் பெற்றது.
இனி, லகர, ளகர வீற்றுச் சொற்கள், தகர முதன்மொழி வருமிடத்து ஈற்றிலுள்ள லகர, ளகரங்கள் முறையே றகர
தொ.15