இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புள்ளி மயங்கியல் 211
(உ-ம்) கல்+ஞெரி - கன்ஞெரி, நுனி, முரி எனவும்,
முள் + ஞெரி - முண்ஞெரி, நுனி, முரி எனவும் வரும்.
இத்திரிபுகளை இவ்வீறுகளின் வேற்றுமை இறுதிக்கண் அல்வழியது தொடக்கத்திற் சிங்க நோக்காக ஆசிரியர் வைத்த தால் இம்முடிபு அல்வழிக்கும் கொள்ளப்படும் என்பர் இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும்.
(உ-ம்) கல்+ஞெரிந்தது = கன்ஞெரிந்தது, நீண்டது, மாண்டது
முள்+ஞெரிந்தது ; முண்ஞெரிந்தது
எனவரும். வேற்றுமை அல்வழியாகிய இரு வழிகளிலும் வரும் இத்திரிபுகளை,
லளவேற் றுமையிற் றடவும் அல்வழி அவற்றோ டுறழ்வும் வலிவரி னாம்மெலி மேவி னணவும் இடைவரி னியல்பும் ஆகும் இருவழி யானு மென்ப. (நன்.227)
என்பதனால் நன்னூலார் தொகுத்துக் கூறியுள்ளார்.
‘அகம் என்ற மகரவீற்றுச் சொல்லின் முன் ‘கை’ என்பது வருமொழியாய் வரின், நிலை மொழியில் முன்னின்ற அகரம் மட்டும் கெடாது நிற்ப, அதன்முன் உள்ள ககர உயிர்மெய்யும் இறுதி மகரமெய்யும் கெடுதல் நீக்கத்தக்கது அன்றெனவும், அவை அங்ஙனம் கெட்டவழி அவ்விடத்து வருமொழி வல்லெழுத்திற்கு ஏற்ற மெல்லெழுத்து மிக்குமுடியும் எனவும் கூறுவர் தொல்காப்பியர்.
அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் வரைநிலை யின்றே ஆசிரி யர்க்க மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான. (தொல்.315)
எனவரும் சூத்திரம் இத்திரிபினைக் கூறுவதாகும்.
(உ-ம்) அகம்+கை = அங்கை எனவரும்.
இச்சூத்திரத்தில் கெடுதலும் என்ற உம்மையால், ககர வுயிர் மெய்யும் மகர வொற்றும் கெடாது நின்று, ஈற்றிலுள்ள அம்மகரம், “அல்வழியெல்லாம் மெல்லெழுத் தாகும்” (தொல் எழுத் 34 என்ற விதிப்படி ங்கரமாகத் திரிந்து அகங்கை’ எனவும்வரும் என்பது, இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளாற் புலனாகும்.