உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

தொல்காப்பியம்-நன்னூல்



   ‘அகம்’ என்ற சொல்முன்னர்க் ‘கை’ என்ற சொல்லே யன்றிச் செவி என்பது வரினும் நிலைமொழியிடையிலுள்ள ககர வுயிர்மெய்யும் மகர வொற்றும் கெடும் என்பர் பவணந்தியார்.
       அகமுனர்ச் செவிகை வரின் இடை யனகெடும்.    (நன்.222)

என்பது நன்னூல்.

   (உ-ம்)    அகம்+செவி = அஞ்செவி எனவரும்.
  “அஞ்செவி நிறைய மந்திர மோதி” என்பது புறப்பொருள் வெண்பாமாலை,
   இவ்வாறே ‘அகம் என்பதன்முன் சிறை என்பதுவரினும் இடையன கெட்டு அஞ்சிறைத் தும்பி (குறுந்தொகை-2 என வருதலையும் இச்சூத்திர விதியால் தழுவிக்கொள்வர் சங்கர நமச்சிவாயர்.
   ‘நும் என்னும் மகர வீற்றுச்சொல், அல்வழிக்கண் கூறுங்கால், அச்சொல்லில் நகர ஒற்றின்மேல் நின்ற உகரங்கெட, அவ்வொற்றின்மேல் ஈகாரம் ஊர்ந்து நீம் என நின்று, அவற்றின் இடையிலே ஓர் இகரம் வந்து நிலைபெற்று நீயிம் என ஆகி, இறுதியிலுள்ள மகர மெய் அவ்விடத்து ரகர மெய்யொன்று வந்து நீயிர் எனத்திரிந்து முடியும் என்பர் தொல்காப்பியர் இத்திரிபினை,
     அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை 
     உக்கெட நின்ற மெய்வயின் ஈவர 
     ‘இ, இடை நிலைஇ ஈறுகெட ரகரம் 
     நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே 
     அப்பான் மொழிவயின் இயற்கை யாகும்.   (தொல்.326)

எனவரும் சூத்திரத்தில் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார்.

   (உ-ம் நீயிர் குறியீர், சிறியீர், தீயீர், பெரியீர்

எனவரும். தும் என்ற சொல்லே நீயிர் எனத்திரிந்தது என்னுந் தொல்காப்பியர் கருத்துக்கு மாறாக நீர் என்ற சொல்லே தும், எனத்திரிந்தது எனப் பவணந்தியார் கூறியுள்ளமை முன்னர்க் (நன்னூல் 247-ம் சூத்திரம்) குறிக்கப்பெற்றது.

  மகர வீற்றின்முன் அகர முதன்மொழியும் ஆகார முதன் மொழியும் வருமொழியாய் வருங்காலத்து மகர ஒற்றின்மேல்