உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புள்ளி மயங்கியல் 213

நின்ற அகரம் நீண்டு முடிதலும் உரித்து, நீடாமையும் உரித்து என்பது,

       அகர ஆகாரம் வரூஉங் காலை 
       யிற்றுமிசை அகரம் நீடலு முரித்தே.   (தொல்.311) 

எனவரும் சூத்திரத்தால் உணர்த்தப்பட்டது.

   (உ-ம்) மரம் + அடி = மராஅடி
           குளம் + ஆம்பல் = குளாஅம்பல் எனவரும்.
    “மேல் (312-ல்) செல்வழியறிதல் வழக்கத்தான என்பதனாற் குளாஅம்பல் என்புழி ஆகாரத்தை அகரமாக்குக” என விதிப்பர் நச்சினார்க்கினியர்.
   தேன்’ என்னுஞ் சொல், வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து மீன் என்பதற்குக் கூறிய இயல்பும் திரிபுமாகிய உறழ்ச்சி நிலையை யொத்து முடிதலும், இறுதி னகரங் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிகுதலும், அதன் இனமாகிய மெல்லெழுத்து மிகுதலும், மெல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து இறுதி னகரவொற்றுக் கெட்டும் கெடாதும் உறழ்ந்து முடிதலும் பெறும் என்பதனை,
       தேனென் கிளவி வல்லெழுத் தியையின் 
       மேனிலை யொத்தலும் வல்லெழுத்து மிகுதலும் 
       ஆமுறை யிரண்டும் உரிமையு முடைத்தே . 
       வல்லெழுத்து மிகுவழி இறுதி யில்லை.          (தொல்.340) 
     
       மெல்லெழுத்து மிகினு மான இல்லை.           (தொல்,341) 
       மெல்லெழுத் தியையின் இறுதியொ டுறழும்.   (தொல்.342) 

எனவரும் சூத்திரங்களால் ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.

   (உ-ம்) தேன்+குடம் = தேன்குடம் சாடி, தூதை, பானை
  
           தேன்+குடம் = தேற்குடம்: சாடி, தூதை, பானை
           தேன்+குடம் = தேக்குடம் சாடி, தூதை, பானை
           தேன்+குடம் = தேங்குடம் சாடி, தூதை, பானை

எனவும்,

      தேன் + ஞெரி  = தேன்ஞெரி, நுனி, மொழி 
      தேன் + ஞெரி,  =  நுனி, மொழி 

எனவும் வரும். ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இம்முடிபுகளை,