உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றியலுகரப் புணரியல் 225

இருட்டத்துக் கொண்டான், விளக்கத்துக்கொண்டான் என அத்துச்சாரியையும் வல்லெழுத்தும் பெற்று முடிதலும் கொள்க. ஆசிரியர் தொல்காப்பியனார் ஈரெழுத்து மொழி என்றதனை நன்னூலார் நெடிற்றொடர் என வழங்கியுள்ளார்.

       ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம் 
       அக்கிளை மொழியு முளவென மொழிப.    (தொல்,418) 

இது மென்றொடர் மொழியுட் சிலவற்றுக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது.

     (இ~ள்) ஒற்று முன்னே நின்ற நிலைதிரியாது அக்குச் சாரியையோடு வரும் அக்கிளையான சொற்களுமுள என்பர்

எ-து.

        (உ-ம்) குன்று+சுகை = குன்றக்கூகை, மன்று பெண்ணை = மன்றப்பெண்ணை எனவரும்; உம்மையால் கொங்கு+உழவு = கொங்கத்துழவு என அத்துப் பெறுதலும் கொள்க.
       எண்ணுப் பெயர்க்கிளவி உருபியல் நிலையும்.    (தொல்,419)            
   (இ-ள்) குற்றுகர வீற்று எண்ணுப் பெயர்கள் பொருட் பெயரோடு புணரும்வழி உருபு புணர்ச்சியினியல்பிலே நின்று அன்சாரியை பெற்றுமுடியும் எறு.
    (உ-ம்) ஒன்று+காயம் = ஒன்றன் காயம், இரண்டு+காயம்  இரண்டன் காயம், சுக்கு, தோரை, பயறு எனவரும். ஒன்றன் காயம் = ஒன்றனாற் கொண்ட காயம் எனவிரியும். வருமொழி வரையாது கூறினமையின் ஒன்றன்ஞாண், நூல், மணி, யாழ், வட்டு, அடை என இயல்புகணத்துக் கண்ணும் அன்சாரியை பெறுதல் கொள்க.
      வண்டும் பெண்டும் இன்னொடு சிவனும். (தொல்.420) 

(இ-ள்) வண்டு, பெண்டு என்ற மென்றொடர்க் குற்றுகர வீற்றுச் சொற்கள் இரண்டும் இன்சாரியைபெற்று முடியும் எறு.

   (உ-ம்) வண்டினைக் கொணர்ந்தான். பெண்டினைக் கொணர்ந்தான் எனவரும்.
       பெண்டென் கிளவிக் கன்னும் வரையார்      (தொல், 421) 
   (இ-ள்) பெண்டென்னும் சொல்லுக்கு இன்னேயன்றி அன்சாரியை வந்து முடிதலையும் நீக்கார் என்பதாம்.

(உ-ம்) பெண்டன்கை, செவி, தலை புறம் எனவரும்.