உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றியலுகரப் புணரியல் 227

   (உ-ம்) அஃதுக்கடிது - அதுகடிது எனவரும். இவ்வாறு ஏனையவற்றோடும் ஒட்டுக.
       அல்லது கிளப்பின் எல்லா மொழியுஞ் 
       சொல்லிய பண்பின் இயற்கை யாகும்.         (தொல்,425) 

இஃது ஆறிற்றுக் குற்றுகரத்திற்கும் அல்வழி முடிபு கூறுகின்றது.

   (இ-ள்) அல்வழியைச் சொல்லுமிடத்து ஆறு ஈற்றுக் குற்றுகரமும் மேற்சொல்லிய பண்பினையுடைய இயல்பாய் முடியும் என்பதாம்.
   (உ-ம் நாகுகடிது, வரகுகடிது, தெள்குகடிது, எஃகு கடிது, குரங்கு கடிது சிறிது, தீது, பெரிது எனவரும்.
      கரட்டுக்காணம், திருட்டுப்புலையன், குருட்டுக்கோழி, வெளிற்றுப்பனை எனவும், வரட்டாடு, குருட்டெருது எனவும், இருபெயரொட்டுப் பண்புத்தொகை வன்கணத்துக்கண் இனவொற்று மிக்கு வல்லெழுத்துப் பெற்று முடிதலும், இயல்பு கனத்துக்கண் இனவொற்று மிக்குமுடிதலும் ஒர்யாட்டை யானை, ஐயாட்டை எருது எனவும், அற்றைக் கூத்தர். இற்றைக் கூத்தர் எனவும், மன்றைத்துரதை, பண்டைச் சானறோர் எனவும் மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரமும் வல்லொற்றும் பெற்று முடிதலும், மெல்லொற்று வல்லொற்றாகாது ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று முடிதலும் இச்சூத்திரத்தில் வரும் ‘சொல்லிய பண்பின்’ என்ற சொற்களாற் கொள்ளப்படும்.
     ‘பண்பின் என்றதனால் ஐகாரம் பெற்று முடிவனவற்றை
       ஐயிற் றுடைக்குற் றுகரமு முளவே.    (நன்.185) 

என்ற சூத்திரத்தால் சுட்டினார் நன்னூலார்.

      வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே.   (தொல்.425)
      இஃது அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
     இ-ள் வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரம் அல்வழிக்கண் வல்லெழுத்து வருவழி வந்த எழுத்து மிக்கு முடியும். எறு.
     (உ-ம்) சுக்குக்கடிது, பட்டுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். இதனை,
         வன்றொட ரல்லன முன்மிகா அல்வழி. (நன்.181)

என்ற சூத்திரத்தில் குறிப்பிட்டார் நன்னூலார்.