இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குற்றியலுகரம் புணரியல் 231
தான் ஏறிய மெய்யொடுங்கெடும். ஆண்டு இரண்டல்லாத எண்ணுப் பெயரோடு புணர்வழி இன்சாரியை இடைவந்து முடியத் தோன்றும் என்பதாம்.
(உ-ம்) பதினொன்று, பதின் மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு எனவரும். நிலைமொழி முற்கூறாததனால் ஒன்பதின் கூறு, ஒன்பதின்பால் எனப் பிற வெண்ணின் முன் பிற பெயர் வந்துழியும் இன் பெறுதல் கொள்வர் உரையாசிரியர்.
பத்தனொற் றுக்கெட னகாரம் இரட்டல் ஒத்த தென்ப இரண்டுவரு காலை. (தொல்,434)
இது மேல் இன் பெறாதென்று விலக்கிய இரண்டற்குப் பிறிது விதி கூறுகின்றது.
(இ-ள்) பத்தென்னுஞ் சொல்லில் நின்ற தகரவொற்றுக் கெட அவ்விடத்து னகரவொற்று இரட்டித்து வருதல் இரண்டென்னும் எண் வருமொழியாய் வருங்காலத்திற் பொருந்திற்றென்பர் ஆசிரியர் (எறு)
(உ-ம்) பத்து+இரண்டு = பன்னிரண்டு எனவரும். இதனை,
இரண்டு முன்வரிற் பத்தினிற் றுயிர்மெய் கரந்திட வொற்று னவ்வாகு மென்ப. (நன்.198)
என்னுஞ் சூத்திரத்திற் குறிப்பிடுவர் நன்னூலார்.
ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது. (தோல்,435) இஃது ஆயிரமென்னும் எண்ணுப்பெயர் வரின் வரும் முடிபு கூறுகின்றது.
(இ-ள்) முற்கூறிய பத்தென்னும் எண்முன் ஒன்று முதலியனவேயன்றி ஆயிரமென்னும் எண் வந்தாலும் முன்னர் கூறிய இயல்பிற்றிரியாது ஈறுகெட்டு இன்பெற்று முடியும் (எறு).
(உ-ம்) பதினாயிரம் எனவரும்.
நிறையு மளவும் வரூஉங் காலையுங் குறையா தாகும் இன்னென் சாரியை. (தொல்.436)
(இ-ள்) முற்கூறிய பத்தன் முன்னர் நிறைப்பெயரும் அளவுப் பெயரும் வருங்காலத்தும் இன்னென்னும் சாரியை குறையாது வந்து முடியும். (எ-று)
(உ-ம்) பதின்கழஞ்சு, தொடி, பலம் எனவும், பதின்கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும், பதிற்ற