பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

தொல்காப்பியம்-நன்னூல்


கல் பதிற்றுழக்கு எனவும் வரும். குறையாதாகும் என்றதனால் பத்தென்பதன் முன்னர்ப் பொருட்பெயரும் கொள்க.

   (உ-ம்) பதின்றிங்கள், பதிற்றுவேலி, யாண்டு, அடுக்கு, முழம் எனவரும்.
   இன்சாரியையின் னகரம் றகர மாதல் அளவாகு மொழி முதல் எழுத்து 12 என்பதனுள் நிலைஇய என்றதனால் கொள்ளப்படும்.
   பத்தென்பதன்முன் ஒன்று முதலெண்களே யன்றி ஆயிரம் கோடி யென்னு மெண்ணுப் பெயரும், அளவுப் பெயரும், பிற பெயரும் புணருமிடத்து முற்கூறியபடி பத்தென்பதன் ஈற்றுயிர்மெய் கெட்டு ஆசிரியர் கூறியபடி இன்சாரியையேனும் அதன் திரியாகிய இற்றுச் சாரியையேனும் பெற்று நிற்குமென்பதனை,
       ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி 
       எண்ணிறை யளவும் பிறவரிற் பத்தின் 
       ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்றும் 
       ஏற்ப தேற்கு மொன்பது மினைத்தே.       (நன்.197)

என்ற சூத்திரத்தாற் சுட்டி ஒன்பதென்னும் எண் வருமொழியாய் வருமிடத்தும் இவ்விதியைச் சேர்த்தார் நன்னூலார்.

ஒன்று முதல் ஒன்பதெண்களோடு பத்தென்பது புணர்தல்,

       ஒன்றுமுத லொன்பான் இறுதி முன்னர் 
       நின்ற பத்த னொற்றுக்கெட ஆய்தம் 
       வந்திடை நிலையும் இயற்கைத் தென்ப 
       கூறிய இயற்கை குற்றிய லுகரம் 
       ஆற சிைறுதி அல்வழி யான.           (தொல் 437)
   (இ-ள்) ஒன்று முதல் ஒன்பதீறாகக் கூறுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர் வருமொழியாக வந்து நின்ற பத்தென்னுஞ் சொல்லினது தகரவொற்றுக்கெட ஆய்தம் இடையிலே நிலைபெறும் இயல்பிற்றென்று கூறுவர்; அவற்றுள் ஆறென்னும் ஈறல்லாத விடத்து வரும் நிலைமொழிக் குற்றியலுகரம் முற்கூறிய இயற்கையால் மெய்யொடுங் கெட்டு முடியும் என்றவாறு.
    ‘வந்து என்றதனால் ஆய்தமாகத் திரியாது தகரவொற்றுக் கெட்டு ஒருபது என்று நிற்றலும் கொள்க என்பர் உரையாசிரியர்.