பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றியலுகரப் புணரியல் 233



       முதலிரு நான்கா மெண்முனர்ப் பத்தின் 
       இடையொற் றேகல் ஆய்த மாகல் 
       எனவிரு விதியு மேற்கு மென்ப.            (நன்.195)

என்ற நன்னூற் சூத்திரம் இச்சூத்திரக் கருத்தை ஒட்டியதாகும்.

        முதலி ரெண்ணி னொற்றுரகர மாகும் 
        உகரம் வருத லாவயி னான.              (தொல்.438)

இது மேற்கூறிய சிலவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது.

       (இ-ள்) முதற்கண் நின்ற ஒன்று, இரண்டு என்னும் இரண்டெண்ணினுடைய னகர வொற்றும் ணகர வொற்றும் ரகர வொற்றாகத் திரியும்; அவ்விடத்து உகரம் வந்து நிலைபெறும் என்பதாம்,
   (உ-ம்) ஒன்று-பத்து = ஒருபஃது எனவரும்.
       இடைநிலை ரகரம் இரண்டென் எண்ணிற்கு 
       நடைமருங் கின்றே பொருள் வயினான.        (தொல்,439)

இதுவும் அது.

    (இ-ள்) இரண்டென்னும் எண்ணிற்கு இடைநின்ற ரகர வுயிர்மெய் அம்மொழி பொருள் பெறுமிடத்து நடக்குமிட மின்றிக் கெடும் எ-று.
    (உ-ம்) இரண்டு:பத்து = இருபஃது எனவரும். 
    ஒன்று, இரண்டு என்பதன் ஈற்றுக்குற்றியலுகரத்தை மெய்யொடுங் கெடுத்து னகர ணகர வொற்றினை ரகர வொற்றாக்கி உகரமேற்றிப் பத்தென்பதினிடை நின்ற தகர வொற்றுக்கெடுத்து ஆய்தமாக்கிப் பஃதென வருவிக்க ஒருபஃது இருபஃது என முடிந்தமை காண்க.
   இங்குக் கூறிய முதலிரெண்ணின் நிலைமொழியீற்று முடிபினை,
       ஒன்றன் புள்ளி ரகர மாக 
       இரண்ட னொற்றுயி ரேகவுள் வருமே.       (நன்.189)

என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார். -

       இதன்கண் ஆசிரியர் இரண்டு என்னுஞ் சொல்லின் ரகாரவுயிர் மெய்யைக் கெடுத்து ணகரத்தை ரகரவொற்றாக்கி முடித்தவாறு முடிபுகூறாது இரண்டென்பதன் னகரவொற்றும்